கிராமத்து காதலை யதார்த்தமாக சொல்லும் வெத்து வேட்டு!!

Read Time:2 Minute, 22 Second

09c55672-7671-46a5-b508-e9cb03e6e530_S_secvpfவிழா பட நாயகி மாளவிகாமேனன், ஹரீஷுடன் இணைந்து நடித்து வரும் படம் ‘வெத்து வேட்டு’. இவர்களுடன் இப்படத்தில் இளவரசு, கஞ்சா கருப்பு, ஆடுகளம் நரேன், மீராகிருஷ்ணா, சுஜாதா, தென்னவன், ஸ்ரீரஞ்சனி, பிளாக்பாண்டி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

எஸ்.மணிபாரதி இயக்கும் இப்படத்தை விபின் மூவி பட நிறுவனம் சார்பாக எஸ்.குமார், ஏ.ராமசாமி, டி.சரவணமாணிக்கம், ஆர்.மூர்த்தி, அ.லட்சுமணன் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். காசி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். தாஜ்நூர் இசையமைத்திருக்கிறார்.

படம் பற்றி இயக்குனர் மணிபாரதி கூறும்போது, “கிராமத்து காதலை மிக யதார்த்தமாக இதில் பதிவு செய்திருக்கிறோம். ஜனரஞ்சகமான இளைஞர்களுக்கு பிடித்த காதல் படமாக இது இருக்கும். எழுபது சதவீதம் காமெடி, இருபது சதவீதம் காதல் மற்றும் குடும்ப சென்டிமென்ட் கலந்து இந்த படத்தை உருவாக்கி இருக்கிறோம்.

படத்தின் பாடல் காட்சிகளுக்கு பத்து நாட்களுக்கு 300 துணை நடிகர்கள் வரவழைக்கப்பட்டு பிரமாண்டமாக படமாக்கப்பட்டது. கதாப்பாத்திரங்களுக்கு ஏற்ப நடிகர்களைத் தேர்வு செய்து நடிக்க வைத்திருக்கிறோம். சென்சார் அதிகாரிகள் படத்திற்கு யு சர்டிபிகேட் கொடுத்து பாராட்டினர். இந்த படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பிற்கு உதவிய திருச்சி அருகில் உள்ள கோப்பு என்ற கிராம மக்கள் ஐநூறு பேருக்கு கிடா வெட்டி விருந்து வைத்தோம். அவர்கள் அனைவரும் படம் வெற்றியடைய வாழ்த்தினார்கள்.

திருச்சி, பொள்ளாச்சி, கேரளா பகுதிகளில் இப்படம் படமாக்கப்பட்டுள்ளது. படம் அடுத்த மாதம் திரைக்கு வர உள்ளது” என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post (PHOTOS) வாட்ஸ்ஆப்பில் தீயா பரவிய நிர்வாண போட்டோ – மறுக்கும் நடிகை…!
Next post அறையில் அடைத்து கல்லூரி மாணவிக்கு செக்ஸ் தொல்லை: 2 வாலிபர்கள் கைது!!