மீண்டும் சூர்யாவுடன் ஜோடி சேரும் சமந்தா!!

Read Time:1 Minute, 35 Second

576fe016-b9d7-4710-a4cd-fc11b26b3010_S_secvpfசூர்யா ‘அஞ்சான்’ படத்திற்குப் பிறகு வெங்கட் பிரபு இயக்கி வரும் ‘மாஸ்’ படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவிற்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். யுவன் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படத்திற்குப் பிறகு ‘யாவரும் நலம்’, தெலுங்கில் ‘மனம்’ ஆகிய படங்களை இயக்கிய விக்ரம் குமார் இயக்கும் ‘24’ என்னும் படத்தில் நடிக்க இருக்கிறார். இதில் சூர்யாவிற்கு ஜோடியாக யார் நடிப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்தனர். தற்போது சூர்யாவிற்கு ஜோடியாக சமந்தா நடிக்க இருப்பதாக செய்திகள் வந்துள்ளது.

ஏற்கனவே சமந்தா சூர்யாவுடன் இணைந்து ‘அஞ்சான்’ படத்தில் நடித்திருந்தார். விக்ரம் குமார் இயக்கிய ‘மனம்’ தெலுங்கு படத்தில் சமந்தா நடித்திருக்கிறார். இதன் காரணமாகவே இப்படத்தில் சமந்தா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தொடங்க இருக்கிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அறையில் அடைத்து கல்லூரி மாணவிக்கு செக்ஸ் தொல்லை: 2 வாலிபர்கள் கைது!!
Next post தேனாம்பேட்டையில் கணவருடன் பைக்கில் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு!!