காரை நிறுத்துவதற்காக சாலையை ஆக்கிரமித்த ஷாரூக்கான்: அப்புறப்படுத்திய மும்பை நகராட்சி!!

Read Time:1 Minute, 45 Second

8faa0964-e3a8-4500-a7b3-df15221dac8e_S_secvpfபாலிவுட் நடிகர் ஷாரூக்கான் மும்பையில் உள்ள தனது பங்களாவிற்கு முன்பாக சட்டத்திற்கு புறம்பாக ஆக்கிரமித்து கட்டிய பகுதி இன்று நகராட்சி அதிகாரிகளின் மேற்பார்வையில் இடிக்கப்பட்டது.

கடந்த ஜனவரி 29-ம் தேதி பா.ஜ.க. எம்.பி பூனம் மகாஜன் நகராட்சி கமிஷனருக்கு அனுப்பிய கடிதத்தில், நடிகரின் பெயரை குறிப்பிடாமல், ஒரு நடிகர் பொதுமக்கள் செல்லும் சாலையில் நிரந்தர ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும் இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் அந்த ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்.

இதையடுத்து கடந்த வாரம் மும்பை நகராட்சி கவுன்சில் ஒரு வாரத்திற்குள் ஆக்கிரமிப்பை அகற்றும் படி ஷாரூக்கானிற்கு நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் ஒரு வாரமாகியும் அந்த ஆக்கிரமிப்பு அகற்றப்படாத நிலையில் இன்று நகராட்சி அதிகாரிகளின் மேற்பார்வையில் அவர் ஆக்கிரமித்து கட்டியிருந்த பகுதி உடைத்து அப்புறப்படுத்தப்பட்டது.

ஷாரூக்கான் தனது விலை உயர்ந்த காரை நிறுத்துவதற்காக சாலையோர பிளாட்பாரத்தை ஆக்கிரமித்து உயரமான சிமெண்ட் மேடை அமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சன்னி லியோனின் ஆபாச காட்சி ஏ படத்தைவிட மோசம்: தணிக்கை குழு எதிர்ப்பு!!
Next post ராஜஸ்தானுக்கு சுற்றுலா வந்த ஜப்பானியப் பெண்ணை கற்பழித்த முக்கிய குற்றவாளி போலீசில் சரண்!!