பெங்களூரில், முன்விரோதத்தில் 8-ம் வகுப்பு மாணவனை கடத்திக் கொலை செய்த வாலிபர் கைது!!
பெங்களூரில் முன்விரோதத்தில் 8-ம் வகுப்பு மாணவனை கடத்தி கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பெங்களூரு சந்திரா லே-அவுட் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட மூடலபாளையா சஞ்சீவி நகரை சேர்ந்தவர் ரவிக்குமார். மத்திய அரசு நிறுவனமான பி.இ.எம்.எல். நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பிரமிளா. இந்த தம்பதிக்கு கிரண்குமார் (வயது 14) என்ற மகன் இருந்தான். கிரண்குமார் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 8-ம் வகுப்பு படித்து வந்தான்.
இந்த நிலையில் கடந்த 4-ந் தேதி காலை வழக்கம் போல பள்ளிக்கு சென்ற கிரண்குமார் மாலை வீடு திரும்பவில்லை. இதனால் பதற்றம் அடைந்த கிரண்குமாரின் தந்தை ரவிக்குமார், சந்திரா லேஅவுட் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவன் கிரண்குமாரை தீவிரமாக தேடி வந்தனர். இதற்கிடையே தனக்கும், தன்னுடன் ஒன்றாக வேலை செய்து வரும் பக்கத்து வீட்டை சேர்ந்த மஞ்சுநாத் (22) என்பவருக்கும் முன் விரோதம் இருப்பதாகவும், தன் மகன் காணாமல் போனதற்கு மஞ்சுநாத் காரணமாக இருக்கலாம் என போலீசாரிடம் தனது சந்தேகத்தை ரவிக்குமார் தெரிவித்தார்.
உடனே போலீசார் மஞ்சுநாத்தை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். இதனால் அவரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது அவர் மாணவன் கிரண்குமாரை அடித்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். அதாவது கிரண்குமார் பள்ளியை விட்டு வீட்டுக்கு வரும் வழியில் மஞ்சுநாத், அவனை வழிமறித்து, மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு அழைத்துச்செல்வதாக கூறி மறைவான இடத்தில் வைத்து அடித்து கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து மஞ்சுநாத்தை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் கொடுத்த தகவலின் பேரில் ஞானபாரதியில் உள்ள ஒரு பல்கலைக்கழக வளாகம் பகுதியில் மறைவான இடத்தின் கழிவுநீர் கால்வாய் பகுதியில் மாணவன் கிரண்குமாரின் பிணத்தை போலீசார் மீட்டனர். அதே இடத்தில் கிரண்குமாரின் புத்தகப் பை, சாப்பாட்டு பாத்திரம் மற்றும் சில பொருட்களும் கைப்பற்றப்பட்டன.
மீட்கப்பட்ட கிரண்குமாரின் உடலை அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் கைதான மஞ்சுநாத்திடம் சந்திரா லே-அவுட் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating