இரட்டை வேடத்தில்….!!

Read Time:1 Minute, 43 Second

neethu2‘எல்லாம் அவன் செயல்’, ‘என் வழி தனி வழி’ ஆகிய படங்களை இயக்கியவர் இயக்குனர் ஷாஜி கைலாஸ். இந்த இரண்டு படங்களிலும் ஆர்.கே. கதாநாயகனாக நடித்திருந்தார். இந்நிலையில், மீண்டும் ஆர்.கே.- ஷாஜி கைலாஸ் கூட்டணியில் புதிய படம் ஒன்று உருவாகவிருக்கிறது.

இப்படத்திற்கு ‘வைகை எக்ஸ்பிரஸ்’ என்று பெயர் வைத்துள்ளனர். இதன் பூஜை வருகிற 16-ந் தேதி ஏ.வி.எம். திரையரங்கில் நடைபெறவிருக்கிறது. இப்படத்தில் நீது சந்திரா இரட்டை வேடத்தில் நடிக்கிறார். இவருடன். இனியா, சுஜா வாருண்ணி, கோமல் சர்மா உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள்.
இப்படத்தை ஆர்.கே. பிரம்மாண்டமாக தயாரிக்கிறார்.

நீது சந்திரா நடிப்பில் கடைசியாக ‘அமீரின் ஆதி-பகவன்’ படம் வெளிவந்தது. இப்படத்தில் நீது சந்திரா வில்லத்தனமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பின்னர் ‘சேட்டை’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார். இந்நிலையில், நீண்ட இடைவெளிக்கு பிறகு இவர் நடிக்கவிருக்கும் இந்த படம் அவருக்கு தமிழ் சினிமாவில் திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுக்கும் என்று நம்பப்படுகிறது. மேலும், ‘திலகர்’ என்ற படத்திலும் நீது சந்திரா நடித்து வருகிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காதல் திருமணம் செய்த மாணவி தற்கொலை உடலை வாங்க மறுத்து 2–வது நாளாக உறவினர்கள் மறியல்!!
Next post பெங்களூரில், முன்விரோதத்தில் 8-ம் வகுப்பு மாணவனை கடத்திக் கொலை செய்த வாலிபர் கைது!!