12 பேருடன் ஐஸ்வர்யாராய்!!

Read Time:2 Minute, 47 Second

Something-or-someone-is-seriously-to-be-blamed-seriously-for-otherwise-perfect-Aishwarya-Rai-Bachchans-உலக அழகியான ஐஸ்வர்யாராய், இந்தி பட உலகின் ‘நம்பர்-1’ கதாநாயகியாக இருந்து வருகிறார். அவர் நடிகர் அபிஷேக்பச்சனை திருமணம் செய்து கொண்டு ஒரு குழந்தைக்கு தாயான பிறகும், அவர் மீது ரசிகர்களுக்கு மோகம் குறையவில்லை.

குழந்தை பிறந்த பின், ஐஸ்வர்யாராய் சினிமாவை விட்டு கடந்த 5 வருடங்களாக ஒதுங்கி இருந்தார். 5 வருட இடைவெளிக்குப்பின், அவர் மீண்டும் நடிக்க ஆரம்பித்து இருக்கிறார். பிரபல இந்தி பட அதிபர் சஞ்சய் குப்தா தயாரிக்கும் படத்தின் மூலம் அவர் மறுபிரவேசம் செய்கிறார். ஐஸ்வர்யாராயுடன் இர்பான் கான், ஷபனா ஆஸ்மி ஆகியோரும் இந்த படத்தில் நடிக்கிறார்கள்.

படப்பிடிப்புக்கு ஐஸ்வர்யாராய் தினமும் 12 பாதுகாவலர்களுடன் வருகிறார். அவர் வீட்டில் இருந்து புறப்படும் போதே பாதுகாவலர்களும் கூடவே புறப்படுகிறார்கள். படப்பிடிப்பு தளத்துக்குள்ளும் அவர்கள் வந்து விடுகிறார்கள். படப்பிடிப்பு இடைவேளை சமயங்களில் ஐஸ்வர்யாராய் சக நட்சத்திரங்களுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும் போது, பாதுகாவலர்கள் அவரை சூழ்ந்து நிற்கிறார்கள்.

படப்பிடிப்பு முடிந்து ஐஸ்வர்யாராய் வீட்டுக்கு புறப்படும் போதும், பாதுகாவலர்கள் உடன் செல்கிறார்கள். இந்த அளவுக்கு ஐஸ்வர்யாராய்க்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருப்பது ஏன்? என்று விசாரித்த போது, சில ருசிகரமான தகவல்கள் கிடைத்தன. இந்தி பட உலகின் மற்ற கதாநாயகிகளை விட, ஐஸ்வர்யாராய்க்கு ரசிகர்கள் அதிக அளவில் இருக்கிறார்கள்.

அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் ரசிகர்கள் கட்டுக்கடங்காத அளவுக்கு கூடுகிறார்கள். அவருடைய பாதுகாப்பை கருதியே இந்த ‘தனியார் காவல் படை’ அமைக்கப்பட்டிருப்பதாகவும், பாதுகாவலர்களுக்கான செலவு மட்டும் ரூ.40 லட்சம் ஆகிறது என்றும், அந்த செலவை பட அதிபரே ஏற்றுக் கொண்டிருப்பதாகவும் படக்குழுவினர் தெரிவித்தார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சரோஜா தேவி, குஷ்பு, சிம்ரனுடன் சிம்பு நடனம்!!
Next post ஒடிசாவில் பள்ளி கணக்காளரின் வக்கிர புத்தி: ஆபாச படம் எடுத்ததால் விடுதியை விட்டு வெளியேறிய மாணவிகள்!!