பிளஸ்–1 மாணவி சாவு: தற்கொலைக்கு தூண்டியதாக ஆசிரியை மீது வழக்கு!!

Read Time:1 Minute, 55 Second

30687b39-3033-4e2f-af20-86fc95b90ace_S_secvpfநெல்லை மாவட்டம் வள்ளியூர் ரெயில் நிலைய பகுதியை சேர்ந்தவர் தனபால். இவரது மகள் அனுஷா (வயது16). இவர் வள்ளியூரில் உள்ள ஒரு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்–1 கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் படித்து வந்தார்.

சம்பவத்தன்று ஆசிரியை தமிழ்செல்வி என்பவர் பள்ளிக்கு சென்ற அனுஷாவை குண்டாக, கறுப்பாக இருப்பதாக கூறி வகுப்பறையில் வைத்து சக மாணவிகள் மத்தியில் கேலி– கிண்டலாக பேசியுள்ளார். இதனால் மனமுடைந்த மாணவி அனுஷா வீடு திரும்பியதும் தனது பெற்றோரிடம் ஆசிரியையின் கேலி–கிண்டல் தொந்தரவு குறித்து கூறினார்.

இதுகுறித்து விசாரிப்பதற்காக மாணவியின் தாத்தா அருணாசலம் மற்றும் தாய் வசந்தி ஆகியோர் நேற்று மதியம் பள்ளிக்கு சென்றனர். அந்த நேரத்தில் வீட்டில் தனியாக இருந்த மாணவி அனுஷா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த வள்ளியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் தற்கொலைக்கு தூண்டியதாக ஆசிரியை தமிழ்செல்வி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிறுநீர் கழிக்க அனுமதி கேட்ட சிறுமிக்கு பளார் அறை: ஆசிரியை மீது போலீசில் புகார்!!
Next post சேலத்தில் மாநகராட்சி தொழிலாளி குத்திக்கொலை: 4 ரவுடிகள் கைது!!