திண்டுக்கல்லில் 14 வயது சிறுமிக்கு திருமணம்!!

Read Time:2 Minute, 0 Second

37f1b96f-c2c0-4468-9706-9c17f2f6adef_S_secvpfதிண்டுக்கல் பகுதியை அடுத்த எஸ். குரும்பபட்டியை சேர்ந்த 14 வயதான 10–ம் வகுப்பு மாணவிக்கும், 23 வயது வாலிபருக்கும் நேற்று அதிகாலை திருமணம் நடத்த போவதாக சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் சமூக நலத்துறை அலுவலர்கள் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் அந்த பகுதிக்கு விரைந்தனர். ஆனால் அதற்குள் சிறுமிக்கு திருமணம் முடிந்தது. உடனே அதிகாரிகள் வடமதுரை போலீசில் புகார் செய்தனர்.

போலீசார் விரைந்து வந்து பள்ளி மாணவிக்கு திருமணம் வயது எட்டவில்லை. எனவே மணமக்களை பிரித்து அவரவர் பெற்றோர்களுடன் தனித்தனியே அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தேனி அருகே கரட்டுப்பட்டியை சேர்ந்த 17 வயது இளம்பெண்ணுக்கும், அதே பகுதியை சேர்ந்த மன்மதராஜன் (வயது 26) என்பவருக்கும் திருமணம் நடக்க இருப்பதாக சைல்டு லைன் அமைப்பினருக்கு தெரியவந்தது.

இதையடுத்து சைல்டு லைன் திட்ட அலுவலர் சிவக்குமார், அலுவலர் ராஜா மற்றும் பணியாளர்கள் விஜயலட்சுமி, கற்பகவள்ளி மற்றும் கண்டமனூர் விலக்கு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

அப்போது 2 வீட்டார்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி திருமணத்தை தடுத்தி நிறுத்தினர். உரிய வயது வந்த பிறகே திருமணம் செய்யப்படும் என்று பெண்ணின் தந்தை உறுதிமொழி அளித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கர்ப்பமாக இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள்…!!!
Next post ஐதராபாத்தில் எம்.எல்.ஏ. விடுதியில் சூதாட்டம்: 52 பேர் கைது!!