கயத்தாறு அருகே 2–வது திருமணம் செய்ய தடையாக இருந்ததால் பெண் கொலை!!

Read Time:3 Minute, 15 Second

4085fa7e-9dc9-47c6-b7c1-6562365c583d_S_secvpfநெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள செட்டிகுளத்தைச் சேர்ந்தவர் கற்பகம் (வயது 27). தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள வில்லிசேரி நடு காலனியைச் சேர்ந்தவர் தங்கபாண்டி (30). இவர் கூலி வேலை செய்து வருகிறார்.

இவர்கள் இருவருக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. பிரியா (8), மனோசித்ரா (3) ஆகிய 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்களுக்கு ஆண் குழந்தை இல்லாததால் கணவன்–மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் தங்கபாண்டி தன்னுடைய மனைவியிடம் பெற்றோரின் வீட்டில் கூடுதலாக ரூ.50 ஆயிரம் வரதட்சணையாக வாங்கி வருமாறு கூறியுள்ளார். ஆனால் கற்பகத்தின் பெற்றோரால் உடனடியாக ரூ.50 ஆயிரத்தை ஏற்பாடு செய்ய முடியவில்லை.

எனவே கற்பகம், பணம் வாங்காமல் கணவரின் வீட்டுக்கு திரும்பி வந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த தங்கபாண்டி கத்தியால் மனைவியின் முகம் மற்றும் கழுத்தில் சரமாரியாக குத்தி கொலை செய்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த கோவில்பட்டி உதவி போலீஸ் சூப்பிரண்டு முரளி ராம்பா, கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயசூரியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

மேலும் போலீசார் கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதுதொடர்பாக தங்க பாண்டி, அவருடைய அண்ணன் தங்க மாரிமுத்து (37), அக்காள் சுப்புலட்சுமி (38), தங்கை லதாசெல்வி (25), அக்காள் மகன் சரவணகுமார் (18) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

கைதான தங்கப்பாண்டி போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தின் விவரம் வருமாறு:–

கற்பகத்திற்கு ஆண் குழந்தை பிறக்காததால் அவர் மீது வெறுப்பிலேயே இருந்து வந்தேன். இதனால் நான் எனது உறவுக்கார பெண் ஒருவரை 2–வது திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தேன். ஆனால் இதற்கு எனது மனைவி கற்பகம் தடையாக இருந்து வந்தார். நான் 2–வது திருமணம் செய்து கொள்ள செலவுக்காக ரூ.50 ஆயிரம் வாங்கி வருமாறு கற்பகத்திடம் கூறினேன்.

அவர் பணம் வாங்கி வராததால் ஆத்திரம் அடைந்த நான் எனது குடும்பத்தினருடன் சேர்ந்து கற்பகத்தை கொலை செய்து விட்டேன் என வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காதலர் தினத்துக்கு எதிர்ப்பு: வேலூரில் நாய்களுக்கு திருமணம் செய்து வைத்த இந்து மகா சபையினரால் பரபரப்பு!!
Next post மானாமதுரை அருகே கூடுதல் வரதட்சணை கேட்டு இளம்பெண் சித்ரவதை: கணவர் உள்பட 3 பேர் மீது வழக்கு!!