மானாமதுரை அருகே கூடுதல் வரதட்சணை கேட்டு இளம்பெண் சித்ரவதை: கணவர் உள்பட 3 பேர் மீது வழக்கு!!

Read Time:1 Minute, 21 Second

60d0bcff-8c9f-4127-ab87-26664c69a375_S_secvpfசிவகங்கை மாவட்டம், மானாமதுரை தாலுகா ராஜகம்பீரம் அருகே உள்ள வைக்கால்நகரை சேர்ந்தவர் ரம்ஜன்கனி என்ற நிஷா. இவருக்கும் மேலப்பனைக்காடு பகுதியை சேர்ந்த முபாரக் அலி என்பவருக்கும் கடந்த 2011–ம் ஆண்டு திருமணம் நடந்தது.

திருமணத்தின்போது பெண் வீட்டார் சார்பில் 34 பவுன் நகை மற்றும் சீர்வரிசை பொருட்கள் கொடுக்கப்பட்டன. இவர்களுக்கு 4 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் முபாரக் அலி கூடுதல் வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்வதாக மதுரை ஐகோர்ட்டு கிளையில் ரம்ஜன் கனி வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி இது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு மானாமதுரை அனைத்து மகளிர் போலீசுக்கு உத்தரவிட்டார்.

அதன்பேரில் போலீசார் விசாரித்து கூடுதல் வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்ததாக முபாரக் அலி, உறவினர்கள் செல்லப்பொன்னு, மரியம் ஆகிய 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்து உள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கயத்தாறு அருகே 2–வது திருமணம் செய்ய தடையாக இருந்ததால் பெண் கொலை!!
Next post காதலன் வீட்டு முன் தர்ணா: போலீஸ் நிலையத்தில் இளம்பெண் கண்ணீர் புகார்!!