ஐதராபாத்தில் எம்.எல்.ஏ. விடுதியில் சூதாட்டம்: 52 பேர் கைது!!

Read Time:1 Minute, 51 Second

addd320d-1e74-448f-b5bf-d314e084560d_S_secvpfஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலத்துக்கு ஐதராபாத் பொது தலைநகரமாக உள்ளது. இங்குள்ள பழைய எம்.எல்.ஏ. விடுதியில் சூதாட்டம் நடப்பதாக அரசுக்கு புகார்கள் வந்தது.

இதையடுத்து சிறப்பு அதிரடி படை போலீசார் நேற்று எம்.எல்.ஏ. விடுதியில் புகுந்து அதிரடி சோதனை நடத்தினார்கள். இங்குள்ள 707, 708 பிளாக்கில் கிளப் போல சூதாட்டம் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர் பங்கேற்று சீட்டாட்டம் விளையாடிக் கொண்டிருந்தனர். போலீசார் அவர்களை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

மொத்தம் 52 பேர் கைதானார்கள். அவர்களிடம் இருந்து ரூ.12 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 60 செல்போன்களும் சிக்கியது. கைதானவர்களில் கர்னூல் முன்னாள் எம்.எல்.ஏ. ஒருவரின் உதவியாளர்கள் நரசிம்மா ரெட்டி, கேசவா ரெட்டி ஆகியோரும் அடங்குவர். இவர்கள் தலைமையில் சூதாட்ட கிளப் செயல்பட்டு வந்தது.

மேலும் பல்வேறு அரசியல் கட்சி முக்கிய பிரமுகர்கள், முன்னாள் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.சி. மற்றும் தொழில் அதிபர்களும் பிடிபட்டனர். சோதனையின் போது எம்.எல்.ஏ.க்களும் விடுதியில் இருந்ததாக கூறப்படுகிறது. அவர்களை பற்றிய விவரங்களை தெரிவிக்க போலீசார் மறுத்து விட்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திண்டுக்கல்லில் 14 வயது சிறுமிக்கு திருமணம்!!
Next post கற்பழிப்பு வழக்கை திரும்பப் பெறக்கோரி நேபாளப் பெண் 3 மாதம் சிறைவைப்பு!!