அனுப்பர்பாளையம் அருகே கர்ப்பிணி பெண் பலாத்காரம்: வாலிபர் கைது!!
திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம் ஆஷர் மில் பகுதியை சேர்ந்தவர் மணி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது மனைவி இந்திரா (வயது 19, பெயர் மாற்றப்பட்டுள்ளது). 5 மாத கர்ப்பிணி.
இவர் கணவர் ராஜனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மனமுடைந்து வீட்டைவிட்டு கடந்த 8–ந் தேதி வெளியேறினார்.
கோவையில் உள்ள தோழியின் வீட்டுக்கு வந்த இந்திரா அங்கிருந்து நள்ளிரவு 12 மணிக்கு வீட்டுக்கு புறப்பட்டார். கோவையில் இருந்து நேரடியாக அனுப்பர் பாளையத்துக்கு பஸ் வசதி இல்லாத காரணத்தால் பல்லடம் வழியாக ஊருக்கு செல்ல முடிவெடுத்தார்.
கோவையில் இருந்து பஸ் மூலம் நள்ளிரவு 1 மணிக்கு பல்லடம் பஸ் நிலையத்துக்கு வந்து இறங்கினார். அங்கு இரவு பஸ் வசதி இல்லை என்பதை அறிந்த இந்திரா பஸ் நிலையம் முன்புள்ள ஆட்டோ நிறுத்தத்துக்கு சென்று அனுப்பர்பாளையத்தில் உள்ள தனது வீட்டுக்கு செல்ல கட்டணம் எவ்வளவு? என்று கேட்டார்.
அதற்கு ஆட்டோ டிரைவர் ரூ.300 கட்டணம் கேட்டனர். அவ்வளவு பணம் இல்லை எனக்கூறிய இந்திரா வேறு வழியில்லாமல் ஆட்டோ நிறுத்தம் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பாலகுடிபட்டியை சேர்ந்த தட்சிணாமூர்த்தி மகன் பாண்டியராஜன் (26) வந்தார்.
இவர் பல்லடம் மாதப்பட்டியில் உள்ள மணல் தரம் பிரிக்கும் மையத்தில் வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு பணியில் இருந்த பாண்டியராஜன் டீக்குடிப்பதற்காக மோட்டார் சைக்கிளில் பல்லடம் பஸ் நிலையத்துக்கு வந்தார்.
அங்கு தனியாக இந்திரா நின்று கொண்டிருப்பதை கண்டு சபலமடைந்தார். இந்திராவின் அருகில் சென்று விசாரித்தார். அப்போது இந்திரா பஸ் இல்லாத காரணத்தால் ஆட்டோவில் வீட்டுக்கு செல்ல நினைத்ததாகவும், ஆனால் ஆட்டோ டிரைவர் 300 ரூபாய் கேட்பதாகவும் கூறினார்.
இதையடுத்து பாண்டியராஜன் எனது மோட்டார் சைக்கிளுக்கு 1 லிட்டர் பெட்ரோல் மட்டும் போட்டுக்கொடுத்தால் வீட்டுக்கு அருகில் கொண்டு சென்று இறக்கி விடுவதாக ஆறுதல் வார்த்தை கூறினார். இதை உண்மை என நம்பிய இந்திராவும் பெட்ரோல் போட பணம் கொடுத்தார்.
பெட்ரோல் போட்டுக் கொண்டு வந்து இந்திராவை மோட்டார் சைக்களில் ஏற்றிக் கொண்டு பல்லடம் – திருப்பூர் ரோட்டில் பாண்டியராஜன் சென்றார். சின்னரை காட்டுப்பகுதி வழியாக மோட்டார் சைக்கிள் சென்ற போது இந்திரா சந்தேகமடைந்தார்.
அனுப்பர்பாளையம் ரோடு வழியாக செல்லாமல் காட்டுப்பகுதியில் செல்வது ஏன்? என்று பாண்டியராஜனிடம் கேட்டார்.
அதற்கு பாண்டியராஜன் இந்த பகுதியில் என் நண்பன் ஒருவன் உள்ளான். அவனுக்கு பணம் கொடுக்க வேண்டியுள்ளது. பணத்தை கொடுத்து விட்டு அப்படியே சென்றுவிடலாம் என்று கூறி அடர்ந்த காட்டுப்பகுதிக்கு சென்றார்.
திடீரென காட்டுப் பகுதியில் மோட்டார் சைக்கிளை பாண்டிய ராஜன் நிறுத்தினார். பின்னர் இந்திராவை கீழே இறங்கும்படி கூறினார். இதனால் அதிர்ச்சியடைந்த இந்திரா என்னை ஏன் இங்கு அழைத்து வந்தாய்? என்று தகராறில் ஈடுபட்டார். அதற்கு பாண்டியராஜன் ஒழுங்காக நான் சொல்வதை கேள். என்னுடன் உல்லாசமாக இருந்தால் உயிருடன் வீடு திரும்பலாம்.
இல்லையென்றால் இந்த காட்டுப்பகுதியிலேயே உன்னை கொலை செய்து புதைத்து விடுவேன் என்று மிரட்டல் விடுத்தார். இதனால் பயந்து போன இந்திரா கதறி அழுது தன்னை விட்டுவிடும்படி கெஞ்சினார். ஆனால் எதற்கும் மசியாத பாண்டியராஜன் வலுக்கட்டாயமாக இந்திராவை பாலியல் பலாத்காரம் செய்தார்.
இதை யாரிடமும் சொல்லக் கூடாது என்று இந்திராவை எச்சரித்தார். பின்னர் மோட்டார் சைக்கிளில் இந்திராவை ஏற்றி அனுப்பர்பாளையத்தில் உள்ள அவரது வீட்டில் இறக்கி விட்டு பாண்டியராஜன் சென்று விட்டார்.
வீட்டுக்கு சென்ற இந்திராவின் நிலையை கண்டு அவரது கணவர் மணி விசாரித்தார். அப்போது தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து இந்திரா விளக்கினார். இது குறித்து பல்லடம் போலீசில் புகார் செய்தனர்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து பாண்டியராஜனை கைது செய்தனர். இந்த சம்பவம் பல்லடம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Average Rating