ஆஸ்பத்திரி செலவுக்கு பணம் இல்லை: தனக்கு தானே பிரசவம் பார்த்த பெண் பலி!!

Read Time:3 Minute, 51 Second

4d6b343d-3416-433c-b96c-016922623bea_S_secvpfவிருதுநகர் மாவட்டம் சிவகாசி புதுப்பட்டியை சேர்ந்தவர் பரமேஷ். இவரது மனைவி சுமதி (வயது 29). இவர்களுக்கு ஜெயஸ்ரீ (7), ஷர்மிளா (4½) என்ற 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

பரமேஷ் குடும்பத்துடன் பிழைப்பு தேடி கடந்த சில வருடங்களுக்கு முன் திருப்பூர் வந்தார். திருப்பூரில் உள்ள நல்லூர் காஞ்சிநகரில் வாடகைக்கு வீடு எடுத்து வேலைக்கு சென்று வந்தார்.

கடந்த 6 மாதத்துக்கு முன் கணவன்–மனைவிக்கிடையே குடும்பத்தகராறு ஏற்பட்டது. இதில் கணவர் பிரிந்து சென்றுவிட்டார். அப்போது சுமதி கர்ப்பமாக இருந்தார். கர்ப்பிணியான சுமதி வீட்டு வேலைக்கு சென்று 2 பெண் குழந்தைகளையும் காப்பாற்றி வந்தார்.

நிறைமாதம் நெருங்கியதும் ஆஸ்பத்திரிக்கு சென்று பிரசவம் பார்க்க சுமதியிடம் பணவசதி இல்லை. அரசு ஆஸ்பத்திரியில் பிரசவம் பார்த்தாலும் சிறுசிறு செலவுகளுக்கு கூட பணம் இல்லாத நிலை சுமதிக்கு ஏற்பட்டது. மேலும் ஆஸ்பத்திரியில் படுத்துக்கொண்டால் 2 குழந்தைகளை கவனிக்க முடியாத பரிதாப நிலையும் அவருக்கு ஏற்பட்டது.

இந்நிலையில் நேற்று இரவு 10.30 மணிக்கு மேல் சுமதிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. பண வசதில்லாமல் வேறு வழியின்றி தனக்கு தானே பிரசவம் பார்த்துக்கொள்ள முடிவெடுத்தார். வேதனையுடன் புரண்டு புரண்டு படுத்தார். தூங்கிக்கொண்டிருந்த குழந்தைகளுக்கு கூட தனது வேதனை தெரியக்கூடாது என்று வாய்விட்டு சத்தம்போடவில்லை. பலமணி நேர போராட்டத்துக்கு பின் பெண் குழந்தை பிறந்தது. இதில் சுமதிக்கு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டது. அதிக ரத்தப்போக்கால் சுமதி மயங்கினார். துரதிஷ்டவசமாக பிறந்த குழந்தை இறந்தது.

தூங்கிய மற்ற 2 பெண் குழந்தைகள் எழுந்து பார்த்தபோது தாய் ரத்தவெள்ளத்தில் மயங்கி கிடந்ததை கண்டு அலறிசத்தம் போட்டு அழுதனர்.

குழந்தைகளின் அழுகுரல் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தனர். அப்போது பிறந்த குழந்தை ரத்த சகதியில் இறந்து கிடந்தது. அசைவற்று கிடந்த சுமதியை எழுப்பி பார்த்தனர். ஆனால் அவர் எழவில்லை.

அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த ஆம்புலன்ஸ் மருத்துவ ஊழியர்கள் சுமதியை சோதித்து பார்த்தனர். அப்போது சுமதி ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது.

இதனையடுத்து வீட்டு உரிமையாளர் சதாசிவம் திருப்பூர் ரூரல் போலீசில் புகார் செய்தார். உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கள்ளக்காதல் படுத்தும்பாடு: போலீஸ் நிலையத்தில் தாயிடம் கெஞ்சிய சிறுவன்!!
Next post அனுப்பர்பாளையம் அருகே கர்ப்பிணி பெண் பலாத்காரம்: வாலிபர் கைது!!