தனியார் பள்ளியில் கூந்தலை வெட்டிய ஆசிரியைகள்: மாணவி தற்கொலை முயற்சி!!

Read Time:4 Minute, 7 Second

d5737f4d-3cea-4991-a9b1-091ccf506f10_S_secvpfதிருவண்ணாமலை அருகே உள்ள கருந்துவாம்பாடி கிராமத்தை சேர்ந்த 14 வயது மாணவி. ஒருவர் திருவண்ணாமலை, வேலூர் சாலையில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 9–ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த 5–ந்தேதி வழக்கம் போல அந்த மாணவி பள்ளிக்கு சென்றார். அப்போது அவரது வகுப்பறைக்கு வந்த 2 ஆசிரியைகள் அந்த மாணவியிடம் பள்ளி விதிமுறையின்படி முழுமையாக பின்னல் ஜடை போடாமல், கூந்தலின் ஒரு பகுதியை முகத்து பக்கமாக ஏன் தொங்க விட்டுக்கிறாய் என கேட்டுள்ளனர்.

தன்னுடைய கூந்தலின் அமைப்பு அப்படி இருப்பதால் கிளிப் பொருத்தினாலும் தன்னால் அதை சரிசெய்ய முடியவில்லை என மாணவி விளக்கம் அளித்திருக்கிறார்.

ஆனாலும் மாணவியின் விளக்கத்தை ஏற்காத ஒரு ஆசிரியை கத்தரிகோல் மூலம் மாணவியின் கூந்தலின் சிறு பகுதியை கத்தரித்துள்ளார்.

மாணவ, மாணவிகளுக்கு முன்பு தன்னுடைய கூந்தல் கத்தரிக்கப்பட்டதால் மாணவி அவமானமும் அதிர்ச்சியும் அடைந்தார். அதை தொடர்ந்து வீட்டுக்கு சென்ற அவர் நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் தெரிவித்து அழுதுள்ளார். பள்ளிக்கு நேரில் சென்று விசாரிப்பதாக பெற்றோர் சமாதானம் செய்துள்ளனர்.

இந்நிலையில் அன்று இரவு வீட்டில் எலி மருந்தை குடித்து மாணவி தற்கொலைக்கு முயன்றுள்ளார். அதிகாலையில் எழுந்த பெற்றோர் மகள் மயங்கிய நிலையில் படுக்கையில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மாணவிக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து மாணவியின் தந்தை திருவண்ணாமலை தாலுகா போலீசில் புகார் செய்தார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் முருகேசன், மருத்துவமனைக்கு நேரில் சென்று நடந்த சம்பவம் குறித்து மாணவியிடம் கேட்டறிந்தார். அதேபோல் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களிடமும் விசாரணை நடத்தினார்.

இதுகுறித்து மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் முருகேசன் கூறியதாவது:–

மாணவி மற்றும் பள்ளி நிர்வாகத்திடம் நடத்திய விசாரணை அறிக்கையை மெட்ரிக் பள்ளி இயக்குனருக்கு அனுப்பியிருக்கிறேன். பிரச்சனைக்கு காரணமான ஆசிரியை சுமதி என்பவரை பணி நீக்கம் செய்திருப்பதாக பள்ளி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணை அறிக்கையின் அடிப்படையில் மெட்ரிக் பள்ளி இயக்குனர் மேல் நடவடிக்கை எடுப்பார் என்றார்.

ஜவ்வாதுமலையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஈவ்டீசிங் காரணமாக மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை தொடர்ந்து மேலும் தனியார் பள்ளி மாணவி ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் திருவண்ணாமலை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மேற்கு வங்காளத்தில் இருந்து கடத்தப்பட்ட பெண் ஓசூரில் மீட்பு: மது பாரில் ஆட வைத்து சித்ரவதை!!
Next post சென்னை அருகே மாணவருக்கு கத்திக்குத்து: 2 மாணவர்கள் கைது!!