தர்மபுரி அருகே பெண் கொலை: தண்டவாளத்தில் பிணம் வீச்சு!!

Read Time:3 Minute, 2 Second

3dbca942-9424-4446-aa8c-ffe07fbe7266_S_secvpfதர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள கெஜ்ஜல்நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் நாகராஜ் (வயது46). விவசாயி. இவரது மனைவி கோவிந்தம்மாள்(41). பெரியாம்பட்டியில் காய்கறி வியாபாரம் நடத்தி வந்தார்.இவர்களது மகன் பச்சியப்பன் கால்நடை மருத்துவம் படித்து வருகிறார். ஒரு மகள் கல்லூரியிலும், மற்றொரு மகள் பிளஸ்–2 வும் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில் மகன்–மகள்களின் கல்வி செலவிற்காக தனது நகையை அடகு வைக்க புலிகரை வங்கிக்கு கோவிந்தம்மாள் நேற்று காலை சென்றார். அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது கணவர் நாகராஜ் மனைவியை பல இடங்களில் தேடினார். இந்த நிலையில் நேற்று மாலை சுமார் 6 மணியளவில் புலிகரை தண்டவாளம் அருகே கழுத்து இறுக்கப்பட்ட நிலையில் கோவிந்தம்மாள் பிணமாக கிடந்தார்.

அவரது உடல் முழுவதும் தாக்கப்பட்டதற்கான அடையாளங்கள் இருந்தன. கன்னத்திலும் பலமான காயம் இருந்தது. தலை, கை, கால்களில் கம்புகளால் தாக்கப்பட்ட அடையாளங்களும் இருந்தன. இதனைக் கண்ட அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர்.

இது குறித்து மதிகோண் பாளையம் போலீசார் வழக்குப்பதிவு நகை அல்லது பணத்திற்காக கோவிந்தம்மாள் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணத்திற்காக கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் இந்த கொலை வழக்கு தொடர்பாக கெஜ்ஜல் நாயக்கன்பட்டியை சேர்ந்த ஒருவர் போலீசாரிடம் சிக்கினார்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் தான் கோவிந்தம்மாளை கொலை செய்துள்ளார் என்பதும், அவருக்கும், கோவிந்தமாளுக்கும் முதலில் பழக்கம் ஏற்பட்டுள்ளதும், அதன் பிறகு இந்த பழக்கம் நாளடைவில் கள்ளதொடர்பாக மாறியதும் தெரியவந்தது. இதன் காரணமாக சம்பவத்தன்று அவரை கொலை செய்து விட்டு நகை, பணத்தை திருடிச் சென்று தப்பி ஓடுவதற்கு முயற்சி செய்தபோது போலீசாரிடம் சிக்கியதும் விசாரணையில் தெரியவந்தது.

இந்த கொலை தொடர்பாக மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சென்னை அருகே மாணவருக்கு கத்திக்குத்து: 2 மாணவர்கள் கைது!!
Next post கொடைக்கானலில் மாணவிகளை பிரம்பால் அடித்த ஆசிரியர் சஸ்பெண்டு!!