மனைவியை எரித்து கொன்ற ஆட்டோ டிரைவருக்கு ஆயுள் தண்டனை!!

Read Time:1 Minute, 17 Second

fe711248-9e54-4d4c-87d7-527d4866f9bc_S_secvpfமும்பை தகிசர் கிழக்கு பகுதியை சேர்ந்தவர் ராகேஷ் (வயது 44). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி சீமா. இவர்களுக்கு 3 குழந்தைகள். ராகேசுக்கு குடிப்பழக்கம் இருந்தது. கடந்த 2011-ம் ஆண்டு டிசம்பர் 19-ந் தேதி அவர் மனைவி சீமாவிடம் மது குடிப்பதற்காக பணம் கேட்டார்.

அவர் பணம் தர மறுத்ததால், ஆத்திரம் அடைந்த ராகேஷ், மனைவி சீமா மீது மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து கொளுத்தினார். பின்னர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட சீமா, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

போலீசார் ராகேசை கைது செய்து திண்டோஷி செசன்சு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அவர் மீதான இறுதிகட்ட விசாரணை நீதிபதி எஸ்.கே.எஸ்.ராஸ்வி முன்னிலையில் நடந்தது. விசாரணை நிறைவில், ராகேசுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post டெல்லி பாலியல் தொல்லை வழக்கு: பாதிக்கப்பட்ட பெண் பல்டியடித்ததால் குற்றம் சாட்டப்பட்டவர் விடுதலை!!
Next post 65 வயதில் 2வது திருமணம்: விவசாயிக்கு அடி–உதை!!