டெல்லி பாலியல் தொல்லை வழக்கு: பாதிக்கப்பட்ட பெண் பல்டியடித்ததால் குற்றம் சாட்டப்பட்டவர் விடுதலை!!

Read Time:2 Minute, 0 Second

15c9274d-6265-4bb1-8b40-0961c01cb20b_S_secvpfடெல்லியில் பாலியல் தொல்லை தந்ததாக கூறி ஒரு ஆண் மீது பெண்ணொருவர் காவல் துறையில் புகார் அளித்தார். அப்பெண்ணின் புகாரின் பேரில் அவருக்கு பாலியல் தொல்லை தந்த நபர் மீது காவல் துறை வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கின் மீதான விசாரணை டெல்லி கீழ் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

அப்போது பாதிக்கப்பட்ட பெண்ணிடம் நடந்த சம்பவத்தைப் பற்றி நீதிபதி கேட்ட போது, அப்பெண் தான் புகார் அளிக்கவில்லை என்றும், காவல் துறையினரே தன்னை வற்புறுத்தி வெற்று காகிதத்தில் கையெழுத்து வாங்கியதாகவும் திடீரென பல்டியடித்தார்.

தான் புகாரே அளிக்கவில்லை என்று அந்த பெண் மறுத்துள்ளதாலும், சம்பவம் நடந்ததற்கு அவர் மட்டுமே சாட்சியாக உள்ள நிலையில் தற்போது அவரே பல்டி அடித்ததால் அன்றைய தினம் அவருக்கு எதுவும் ஆகவில்லை என்று தெரிகிறது. புகார் தாரர் முற்றிலும் தான் கொடுத்த புகாருக்கே எதிராக மாறியுள்ளதால், இந்த வழக்கை மேற்கொண்டு தொடர முடியாது என்று கூறிய நீதிமன்றம் குற்றவாளியை விடுதலை செய்து தீர்ப்பளித்தது.

நீதிமன்றத்தில் நடைபெற்ற முந்தைய விசாரணைகளில், இந்த வழக்கில் தவறாக தன்னை விசாரித்ததாகவும், இது போலியான வழக்கு என்றும் குற்றம் சாட்டப்பட்ட நபர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மனைவியை வெட்டிக் கொன்ற தொழிலாளி கைது!!
Next post மனைவியை எரித்து கொன்ற ஆட்டோ டிரைவருக்கு ஆயுள் தண்டனை!!