கற்பழித்த பெண்ணை கரம் பிடித்த சிலமணி நேரத்தில் தவிக்கவிட்டு மாயமான மினி பஸ் கண்டக்டர்!!

Read Time:2 Minute, 23 Second

8af93f5b-e0be-4b72-8f43-2d9a852431ab_S_secvpfஒரத்தநாடு அருகே உள்ள சோழபுரத்தை சேர்ந்த பஞ்சநாதன் மகன் மாரிமுத்து (வயது 21). இவர் மினி பஸ் கண்டக்டராக வேலைபார்த்து வருகிறார். இவர் தினமும் வள்ளுவர் நத்தம் என்ற இடத்தில் இரவு பஸ்சை நிறுத்தி காலையில் எடுத்து செல்வார். அப்போது அதே பகுதியை சேர்ந்த மாரிமுத்து என்பவர் மகள் கவிதா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அவர்கள் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். அப்போது மாரிமுத்து திருமணம் செய்வதாக ஆசைகாட்டி கவிதாவுடன் உல்லாசமாக இருந்துள்ளார்.

இதில் அவர் 4 மாத கர்ப்பிணி ஆனார். இதுபற்றி தெரியவந்ததும் கவிதாவின் பெற்றோரும் ஊர்மக்களும் காதல்ஜோடியை திருமணம் செய்து கொள்ளும்படி கூறினர். இதைத்தொடர்ந்து கடந்த 3–ந்தேதி அப்பகுதியில் உள்ள முருகன் கோவிலில் வைத்து மாரிமுத்து கவிதாவை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் நேற்று பட்டுக்கோட்டை மகளிர் போலீஸ் நிலையத்துக்கு சென்று தாங்கள் காதல் திருமணம் செய்து கொண்ட தகவலை காதல்ஜோடிகள் தெரிவித்தனர்.

பின்னர் காதல் ஜோடியும், உறவினர்களும் ஒரு பஸ்சில் சொந்த ஊருக்கு புறப்பட்டனர். அந்த பஸ் கரம்பயம் என்ற இடத்தில் நின்றபோது மாரிமுத்து கீழே இறங்கி தலைமறைவாகி விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த கவிதா மீண்டும் பட்டுக்கோட்டை மகளிர் போலீஸ் நிலையத்துக்கு சென்று கணவர் கர்ப்பத்தை கலைக்க சொன்னதாகவும் அதற்கு மறுப்பு தெரிவித்ததால் அவர் தன்னை பிரிந்து சென்றுவிட்டதாகவும் புகார் கூறினார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான மாரிமுத்துவை தேடிவருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நாமக்கல் அருகே மனைவியை கள்ளக்காதலனுடன் அனுப்பிய கணவன்!!
Next post அபுதாபியிலிருந்து சென்னை வந்த வாலிபர் விமான நிலையத்தில் அரை நிர்வாணமாக ஓடியதால் பரபரப்பு!!