ஓடும் காரில் 14 வயது மாணவி கதறக்கதற கற்பழிப்பு: போலீசாரை கண்டித்து பொதுமக்கள் போராட்டம்!!

Read Time:2 Minute, 13 Second

8289e32e-60a5-487a-8aa7-b63472b2832d_S_secvpfகொலை, கொள்ளை, கற்பழிப்பு உள்ளிட்ட வன்முறை வெறியாட்டங்களுக்கு பிரபலமான உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் பரேலி மாவட்டத்தில் உள்ள பரித்பூர் நகரில் பள்ளிக்கு சென்ற மாணவி ஓடும் காருக்குள் கற்பழித்து, சின்னாபின்னப்படுத்தப்பட்ட சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளூர்வாசிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நேற்று காலை பள்ளிக்கு புறப்பட்டு சென்ற அந்த 14 வயது மாணவியை ஒரு சொகுசு காரில் இருந்த இறங்கிய 4 பேர் குண்டுக்கட்டாக தூக்கி காரில் போட்டுக்கொண்டு ஓடும் காரினுள்ளேயே அவரை கதறக்கதற கற்பழித்தனர். பின்னர், ஆள்நடமாட்டம் இல்லாத ஒரு பகுதியில் அவரை இறக்கிவிட்ட அந்த கும்பல், நடந்த சம்பவத்தை பற்றி வெளியே சொன்னால் உன்னை கொன்று விடுவோம் என மிரட்டிவிட்டு சென்றது.

அதிர்ச்சியடைந்த நிலையில் பள்ளிக்கு செல்லாமல் வீடு திரும்பிய அந்த சிறுமி இது தொடர்பாக பெற்றோரிடம் கூறி கதறியழுதாள். அவர்கள் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், பாதிக்கப்பட்ட மாணவியை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பியதில் அவள் கற்பழிக்கப்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பாக போலீசார் இருவரை கைது செய்துள்ள போதிலும், வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதிலும், மேலும் இரு குற்றவாளிகளை கைது செய்வதிலும் மெத்தனமாக இருக்கும் போலீசாரை எதிர்த்து உள்ளூர் மக்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இறைச்சிக்காக பசு மாடுகளை கொன்றால் இனி குண்டாஸ் பாயும்: உ.பி.யில் அவசரச் சட்டம்!!
Next post பெங்களூரில் 8 வயது சிறுமி கற்பழித்துக்கொலை: சாலையோரம் அனாதைப் பிணமாக கிடந்தாள்!!