உடுமலையில் தன்னுடைய திருமணத்தை தானே நிறுத்திய கல்லூரி மாணவி!!

Read Time:2 Minute, 28 Second

50ad6a6f-9880-4e64-9f29-c027225ecbc5_S_secvpfதிருப்பூர் மாவட்டம் உடுமலையைச் சேர்ந்தவர் கவிதா(வயது 20 பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் உடுமலையில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் பி.காம்.சி.ஏ. படித்து வருகிறார்.

கவிதா தன்னுடன் படிக்கும் மாணவிகள் சிலருடன் தாராபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு வந்தார். மிகவும் பதட்டமாக காணப்பட்ட அவர் அங்கிருந்த போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் சிவசங்கரியிடம் ஒரு புகார் மனு கொடுத்தார்.

அதில் உடுமலையில் நாளை (அதாவது இன்று) எனக்கும், எனது அத்தை மகனுக்கும் திருமணம் செய்ய எனது பெற்றோர் முடிவு செய்துள்ளனர். அவருக்கு 35 வயதாகிறது. எனது சம்மதம் இல்லாமலேயே எனக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்துள்ளனர். நான் தொடர்ந்து படிக்க விரும்புகிறேன். கட்டாய திருமணம் நடக்காமல் நீங்கள் தான் தடுத்த நிறுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

புகார் மனுவை பெற்றுக்கொண்ட சப்–இன்ஸ்பெக்டர் உடனடியாக மாணவியின் பெற்றோரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்தார். அவர்களிடம் ‘உங்கள் மகள் மேஜர். நீங்கள் அவருடைய சம்மதம் இல்லாமல் திருமணம் செய்து வைக்க உள்ளதாக புகார் கூறியுள்ளார்.

மேலும் தொடர்ந்து படிக்கவும் விருப்பம் தெரிவித்துள்ளார். எனவே நீங்கள் அவரை திருமணத்துக்கு கட்டாயப்படுத்த முடியாது. அவருக்கு ஏற்பாடு செய்துள்ள திருமணத்தை ரத்து செய்து விடுங்கள் என்று எச்சரித்தார். மாணவியின் பெற்றோரும் சம்மதம் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து மாணவி அங்கிருந்து பெற்றோருடன் புறப்பட்டுச் சென்றார். மாணவியின் துணிச்சல் காரணமாக இன்று நடைபெற இருந்த அவரது திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் இறந்த பெண்ணிடம் நகை திருட்டு!!
Next post பள்ளி வளாகத்தில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மாணவன்!!