பள்ளி வளாகத்தில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மாணவன்!!

Read Time:1 Minute, 38 Second

ab9e860a-51d2-4708-9266-ebf3c7e214a1_S_secvpfஉத்தரப் பிரதேச மாநிலம் சீதாப்பூர் நகரின் காசியாரா பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் நர்சரி படிக்கும் ஐந்து வயது குழந்தையை அதே பள்ளியைச் சேர்ந்த 16 வயது மாணவன் பள்ளி வளாகத்திற்குள் பாலியல் ரீதியாக துன்புறுத்திய சம்பவம் பெற்றோர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று நடைபெற்ற இந்தக் கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட மாணவன் பள்ளி உரிமையாளரின் மகன் என்பதும், தான் செய்த காரியத்தைத் தனது பெற்றோரிடம் தெரிவித்து விட்டு அவன் தலை மறைவாகியுள்ளதும் பெற்றோர்களின் ஆத்திரத்தை அதிகமாக்கியது.

இந்நிலையில் இன்று காலை பள்ளிக்குள் நுழைந்த பெற்றோர்கள் பள்ளிக்குள் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கி தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினர்.

தாக்குதலில் ஈடுபட்ட அவர்களை அமைதிப்படுத்திய காவல் துறையினர், பள்ளியின் உரிமையாளரையும் அதன் மேனேஜரையும் காவலில் வைத்து விசாரித்து வருகின்றனர்.

மாணவனைக் கைது செய்ய தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உடுமலையில் தன்னுடைய திருமணத்தை தானே நிறுத்திய கல்லூரி மாணவி!!
Next post மீன் வியாபாரி கொலை: மனைவி–கள்ளக்காதலன் உள்பட 3 பேர் கைது!!