ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தில் சேர்வதற்காக துருக்கிக்கு சென்ற 19 வயது ஐதராபாத் இளம்பெண் மனம் மாறி திரும்பி வந்தார்!!

Read Time:2 Minute, 1 Second

7587c62f-0119-4835-82d9-d986e6e0d087_S_secvpfசிரியா மற்றும் ஈராக் நாடுகளில் ஆதிக்கம் செலுத்திவரும் தீவிரவாத இயக்கமான ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தில் சேரும் நோக்கத்தில் துருக்கி வரை சென்ற 19 வயது இளம்பெண் மனம் மாறி இந்தியாவுக்கே திரும்பி வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கத்தார் நாட்டில் கடந்த 10 ஆண்டுகளாக தங்கியிருந்த அந்த இளம்பெண், தன்னோடு ஒரே வீட்டில் வசிக்கும் மற்றொரு பெண்ணால் மூளைச்சலவை செய்யப்பட்டு, துருக்கி நாட்டுக்கு சென்று ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் முடிவு செய்தார்.

கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் அந்தப் பெண்ணுடன் துருக்கிக்குச் சென்ற ஐதராபாத் இளம்பெண், அங்குள்ள நிலவரத்தை எல்லாம் பார்த்த பின்னர் திடீரென்று தனது திட்டத்தை மாற்றிக் கொண்டு ஐதராபாத்துக்கே திரும்பிவந்து விட்டதாக ஐதராபாத் நகர போலீஸ் கமிஷனர் மகேந்தர் ரெட்டி இன்று தெரிவித்துள்ளார்.

ஐதராபாத்தில் இருந்து துருக்கிக்கு சென்ற ஒரு இளம்பெண் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தில் சேர்ந்து பயிற்சி பெற்றதாக கூறப்படுகிறதே? என்ற நிருபர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர் ஈராக்குக்கு செல்ல திட்டமிட்டிருந்த அந்தப் பெண், துருக்கி வரை சென்று தனது எண்ணத்தை மாற்றிக் கொண்டு நேராக ஐதராபாத்துக்கு திரும்பி வந்து விட்டார் என கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புது காதலிக்காவது தாலி கட்டுவாரா?
Next post திண்டுக்கல்: மாமியாரை வெட்டி சாய்த்த மருமகனின் கள்ளக்காதலி கைது!!