கூலிப்படையை ஏவி 2–வது மனைவி கொல்ல முயற்சி?: மகனுடன் தீக்குளிக்க முயன்ற மெக்கானிக்!!

Read Time:3 Minute, 50 Second

cc296715-2935-4f5b-ba99-f8186e05e232_S_secvpfஈரோடு திருநகர் காலனி பம்பிங் ஸ்டேஷன் ரோடு பகுதியை சேர்ந்தவர் தங்க ராஜ் (வயது34), இருசக்கர வாகன மெக்கானிக்.

இவருக்கு கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு இளம்பெண்ணுடன் திருமணம் நடந்தது. பின்னர் 6 மாதம் மட்டுமே மனைவியுடன் குடும்பம் நடத்தினார். கருத்து வேறுபாடு காரணமாக மனைவி பிரிந்து சென்று விட்டார்.

பின்னர் அதே பகுதியை சேர்ந்த மல்லிகா என்ற பெண்ணை, தங்கராஜ் 2–வதாக திருமணம் செய்து கொண்டார். மல்லிகாவுக்கு ஏற்கனவே திருமணமாகி 6 மாத பெண் குழந்தை இருந்தது.

கடந்த 12 ஆண்டுகளாக இருவரும் கணவன்–மனைவி போல் குடும்பம் நடத்தி வந்தனர். இவர்களுக்கு ராகுல் காந்தி (7) என்ற மகன் உள்ளான்.

இந்த நிலையில் தங்கராஜ், மல்லிகாவின் நடத்தையில் சந்தேகப்பட்டார்.

தனது நண்பர்கள் 3 பேருடன் மனைவி மல்லிகா கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாக கூறி அடிக்கடி தகராறு செய்து வந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த மல்லிகா, கடந்த 15 நாட்களுக்கு கோபித்துக்கொண்டு தனது 11 வயது மகளுடன் பிரிந்து சென்று விட்டார்.

இதனால் மகன் ராகுல் காந்தியுடன் தங்கராஜ் தனியாக வசித்து வந்தார்.

இந்த நிலையில் இன்று காலை வைராபாளையம் காளிங்கராயன் வாய்க்கால் அருகே தங்கராஜ் சென்று கொண்டிருந்தார்.

அப்போது 3 பேர் கொண்ட கும்பல், திடீரென தங்கராஜை வழிமறித்து உருட்டு கட்டையால் தாக்கினர். இதில் வலி தாங்க முடியாமல் அவர் அலறினார். பின்னர் கும்பல் தப்பி ஓடி விட்டது.

படுகாயம் அடைந்த நிலையில் தங்கராஜ் வாழ்க்கையில் வெறுப்படைந்த நிலையில் இருந்தார்.

2–வது மனைவி மல்லிகா தான், தன்னை கூலிப்படை ஏவி தாக்கியதாக தங்கராஜ் எண்ணினார். இனி வாழ்வதில் அர்த்தமில்லை. எனவே மகனுடன் சேர்ந்து தற்கொலை செய்வோம் என்று முடிவு செய்தார்.

அதன்படி இன்று காலை ஈரோடு கலெக்டர் அலுவலகத்திற்கு தங்கராஜ், மகன் ராகுல்காந்தியை அழைத்துக்கொண்டு வந்தார்.

பின்னர் தான் வைத்திருந்த பாட்டிலில் இருந்த பெட்ரோலை தன் மீதும், மகன் மீதும் ஊற்றினார். பின்னர் தீப்பெட்டியை எடுத்தார்.

அந்த சமயத்தில் அங்கு பணியில் இருந்த போக்குவரத்து போலீசார் சண்முகம், செந்தில் ஆகியோர் இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே போலீசார் இருவரும் விரைந்து சென்று தங்கராஜ் மற்றும் சிறுவன் ராகுல் காந்தி இருவரையும் மீட்டு காப்பாற்றினார்.

இந்த சம்பவம் பற்றி ஈரோடு தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஈரோடு கலெக்டர் அலுவலகம் முன்பு மெக்கானிக், மகனுடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அரூபம் (திரைவிமர்சனம்)!!
Next post கற்பழிப்பு சம்பவம் நடந்த நான்கே மாதங்களில் மூன்று சகோதரர்களுக்கு ஆயுள் தண்டனை!!