நாகர்கோவிலில் காதலனை உதறி விட்டு பெற்றோருடன் சென்ற இளம்பெண்!!
நெல்லை மாவட்டம் நாங்குநேரியை சேர்ந்தவர் கோகிலா(வயது 21). இவர் குடும்பத்தினருடன் பெங்களூரில் வசிக்கிறார்.
இவரது பக்கத்து வீட்டில் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த முத்துக்குமார்(23) வசித்து வருகிறார். இதில் இவர்களுக்கிடையே காதல் மலர்ந்தது.
இதையறிந்த கோகிலாவின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். கோகிலாவுக்கு முறைமாமன் மாரியப்பனை திருமணம் பேசி நிச்சயம் செய்தனர். அடுத்த வாரம் இவர்களது திருமணம் நடக்க இருந்த நிலையில் கோகிலா மாயமானார். இதுகுறித்து அவரது பெற்றோர் பெங்களூர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோகிலாவை தேடி வந்தனர்.
இந்நிலையில் கோகிலா முத்துக்குமாருடன் நாகர்கோவிலில் இருக்கும் தகவல் அறிந்து அவரது உறவினர்கள் இங்கு வந்தனர். நேற்று முன்தினம் நாகர்கோவிலில் முத்துக்குமாரை மடக்கிப்பிடித்தனர். அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு பிரச்சனை போலீஸ் நிலையம் சென்றது. வடசேரி போலீசார் முத்துக்குமாரிடம் விசாரணை நடத்தி நாவல் காட்டில் இருந்த கோகிலாவை மீட்டனர். மேலும், இதுகுறித்து கோகிலாவின் பெற்றோருக்கும், பெங்களூர் போலீசாருக்கும் தகவல் கூறினர். பின்னர் கோகிலாவை காப்பகத்தில் தங்க வைத்தனர்.
நேற்று காலை 11 மணி அளவில் கோகிலாவும், காதலன் முத்துக்குமாரும் போலீஸ் நிலையம் அழைத்து வரப்பட்டனர். கோகிலா போலீஸ் நிலையம் வந்ததும் காதலன் முத்துக்குமாரை பார்த்து கண் கலங்கினார். அதோடு, நான் விருப்பப்பட்டு தான் அவருடன் வந்தேன், எனவே அவரை விட்டு விடுங்கள் என போலீசாரிடம் கூறினார்.
சிறிது நேரத்தில் அவரது பெற்றோர் மற்றும் முறைமாமன் மாரியப்பன் ஆகியோர் போலீஸ் நிலையம் வந்தனர். அவர்களை பார்த்ததும் கோகிலா காதலனை உதறி தள்ளிவிட்டு பெற்றோருடன் செல்வதாக போலீசாரிடம் கூறினார்.
இதனால் பிரச்சனை முடிந்து விட்டது என கருதிய நேரத்தில் பெங்களூர் போலீசார் வடசேரி போலீஸ் நிலையம் வந்தனர். அவர்கள் கோகிலா மாயமானது தொடர்பாக பெங்களூரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதால் அவரை தங்களுடன் ஒப்படைக்க வேண்டும் என்றனர். ஆனால் இதற்கு கோகிலாவின் பெற்றோர் மறுப்பு தெரிவித்தனர். அடுத்த வாரம் திருமணம் நடந்து முடிந்த பின்னர் பெங்களூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கிறோம் என்றனர்.
இதற்கு பெங்களூர் போலீசார் மறுத்தனர். இதனால் போலீசாருக்கும், கோகிலாவின் உறவினர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. உடனே வடசேரி இன்ஸ்பெக்டர் பெரியசாமி இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்பட்டது.
திருமணம் முடிந்ததும் கோகிலாவை பெங்களூரில் போலீஸ் நிலையத்தில் ஆஜர்ப்படுத்துவோம் என அவரது பெற்றோர் எழுதி கொடுத்து மாலை 4 மணி அளவில் கோகிலாவை அழைத்து சென்றனர். இதனால் 5 மணி நேரம் நிலவிய பரபரப்பு முடிவுக்கு வந்தது.
Average Rating