நாவலிலிருந்து கதையை திருடியதாக வழக்கு: பி.கே பட தயாரிப்பாளர்-இயக்குனருக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!!

Read Time:1 Minute, 54 Second

76a63019-102c-4d47-a259-04e6c423c0f4_S_secvpfதான் எழுதிய நாவலிலிருந்து சில பகுதியை திருடி, பி.கே. படம் எடுக்கப்பட்டுள்ளதாக எழுத்தாளர் ஒருவர் தொடுத்த வழக்கில் அப்படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

2013 ஆம் ஆண்டு ‘பரிஷ்டா’ என்ற தனது இந்தி நாவலில் இருந்து சில பகுதிகளை கருவாக எடுத்துக்கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டிருப்பதாக கபில் இசாபுரி என்ற நாவலாசிரியர் வழக்கு தொடர்ந்துள்ளார். இன்று இவ்வழக்கு நீதிபதி நஸ்மி வசிரி முன் விசாரணக்கு வந்தது. அப்போது வரும் ஏப்ரல் 16-ந் தேதி தங்கள் தரப்பு ஆதாரங்களுடன் படத்தின் இயக்குனர்களான விது வினோத் சோப்ரா மற்றும் ராஜ் குமார் ஹிரானி, திரைக்கதை எழுதிய அபிஜத் ஜோஷி ஆகியோர் நீதிமன்றத்தின் இணை பதிவாளர் முன் ஆஜராகி தங்கள் தரப்பு விளக்கத்தை அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

முன்னதாக தனது மனுவில், இயக்குனர்கள் சோப்ரா மற்றும் ஹிரானி, அப்படத்தின் தயாரிப்பாளர்கள், திரைக்கதை எழுதிய அபிஜத் ஜோஷி ஆகியோர் தனது கதாபாத்திரங்கள், கருத்துக்களையும், காட்சிகளையும் திருடிவிட்டதாக கூறியுள்ளார். தனது கதையை பயன்படுத்தியதால் 1 கோடி ரூபாயை தனக்கு நஷ்ட ஈடாக தரவேண்டும் என்றும் கபில் கேட்டுக்கொண்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருப்பதி ஆஸ்பத்திரியில் பெண் குழந்தை கடத்தல்: நர்ஸ் வேடமணிந்து வந்த பெண் குறித்து விசாரணை!!
Next post சிங்கம்புணரி அருகே காதல் ஜோடி தற்கொலை: காதலன் பலி!!