ஆற்றில் தவறி விழுந்த பாட்டியை காப்பாற்றிய எட்டு வயது சிறுமிக்கு மத்திய அரசின் வீரதீர விருது!!

Read Time:1 Minute, 35 Second

f4669c24-2c90-4648-a0f3-2d24cb4410ab_S_secvpfஆற்றில் தவறி விழுந்த பாட்டியைக் காப்பாற்றிய எட்டு வயது சிறுமி மத்திய அரசின் வீரதீர விருதிற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

நாகாலாந்தின் தலைநகரமான கோஹிமாவில் உள்ள சிறுமி மோன்பெனி எஜீங். எட்டு வயதான இவர் வோகா கிராமத்தில் உள்ள அனுங்கா ஆற்றிற்கு தனது பாட்டியுடன் குளிக்கச் சென்றார். அப்போது ஆற்றில் கை கழுவிக் கொண்டிருந்த பாட்டி திடீரென ஆற்றில் தவறி விழுந்தார். உடனே சாதுர்யமாக செயல்பட்ட அச்சிறுமி பாட்டியை பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தார். மேலும் அருகிலுள்ள கிராமத்திற்குச் சென்று அங்கிருந்த மக்களிடம் நடந்ததைச் சொல்லி அழைத்து வந்து பாட்டியை மருத்துவமனையிலும் அனுமதிக்க வைத்தார்.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் குளிர்கால விடுமுறைக்காக பாட்டியின் ஊருக்கு சென்ற இந்த சிறுமி தனக்குப் பழக்கமில்லாத இடத்திலும் துணிச்சலுடன் செயல்பட்டதற்காக இந்த விருதிற்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அதற்குப் பயந்து விருந்தை தவிர்க்கும் நடிகை!!
Next post ஹாலிவுட் படத்தில் விஜய்?