அரியானாவில் ஏ.டி.எம். இயந்திரத்தையே கொள்ளையடிக்கும் முயற்சியை தடுத்த பொதுமக்கள்!!

Read Time:3 Minute, 5 Second

0022b9b1-b764-454f-bf00-dd061b75a2eb_S_secvpfஅரியானா மாநிலத்தின் ஹிஸார் மாவட்டத்தில் ஏ.டி.எம். இயந்திரத்தையே வேனில் ஏற்றிச் செல்ல துணிந்த கொள்ளையர்களின் முயற்சியை பொதுமக்கள் தடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்றிரவு இங்குள்ள ரோட்டக்கில் இருந்து ஒரு வேனை திருடிக் கொண்டு ஹன்ஸி என்ற பகுதிக்கு வந்த சிலர், அங்குள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவுக்கு சொந்தமான ஏ.டி.எம். மையத்துக்குள் புகுந்தனர்.

அங்கிருந்த ஏ.டி.எம். இயந்திரத்தை பெயர்த்து வேனுக்குள் ஏற்ற அவர்கள் முயற்சி செய்தபோது, முதல் மாடியில் வசிப்பவர்கள் சத்தம் கேட்டு உஷார் அடைந்தனர். உடனடியாக, அவர்கள் போலீசுக்கு புகார் அளித்தனர்.

சில நிமிடங்களுக்குள் சைரன் ஒலித்தபடி போலீசார் வாகனங்களில் விரைந்து வருவதை கண்ட கொள்ளையர்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த திருட்டு வேனில் ஏறி தப்பிக்க முயன்றனர். எதிரில் வந்த போலீஸ் ஜீப்பின் மீது மோதிவிட்டு அசுர வேகத்தில் அந்த வேனை கொள்ளையர்கள் ஓட்டிச் சென்றனர்.

போலீஸ் ஜீப்பும் பின் தொடர்ந்து வேகமாக வருவதை பார்த்த அந்த கும்பல் பின்னால் வந்த போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டபடியே முன்னேறி சென்றது. போலீசாரிடம் பிடிபட்டு விடுவோமோ..? என்று பயந்தவாறு பதற்றத்தில் வேனை ஓட்டிய கொள்ளையர்களில் ஒருவன் அனிபுரா என்ற கிராமத்தில் இருந்த பெரிய மரத்தில் வேனை மோதி விட்டான்.

இனி வேனை நம்பி பயனில்லை என்பதை உணர்ந்த அந்த கொள்ளை கும்பல், கீழே இறங்கி இருளோடு மறைந்து தப்பியோட்டம் பிடித்தது. இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தலைமறைவாக இருக்கும் நபர்களை தேடிவருகின்றனர்.

அவர்கள் கொள்ளையடிக்க முயன்ற அந்த ஏ.டி.எம். இயந்திரத்துக்குள் சுமார் 8 லட்சம் ரூபாய் இருந்ததாக வங்கி அதிகாரிகள் இன்று தெரிவித்தனர். நல்ல வேளையாக அந்த ஏ.டி.எம். மையத்தின் மேல் மாடியில் வசித்தவர்கள் அளித்த புகாரினாலும், போலீசார் விரைந்து வந்ததாலும் அந்தப் பணம் தப்பியதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஹாலிவுட் படத்தில் விஜய்?
Next post கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு: மருத்துவருக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்!!