பீகாரில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள அஷ்டலோக சிலைகள் கொள்ளை!!

Read Time:1 Minute, 28 Second

ca9e038a-a095-4fb2-ba57-b6d216b3567c_S_secvpfபீகார் மாநிலத்தின் கதிகர் மாவட்டத்தில் உள்ள கோவிலில் 1 கோடி ரூபாய் மதிப்புள்ள அஷ்டலோக சிலைகள் இன்று காலை திருடுபோனது.

வழக்கம் போல, நேற்று இரவு கோவிலை பூட்டி விட்டு சென்ற பூசாரி முன்னா தாகுர் இன்று காலை கோவிலை திறக்க வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து காவல் துறைக்கு தகவல் அளித்தார். உடனடியாக கோவிலுக்கு விரைந்த காவல் துறையினர், 90 ஆண்டுகள் பழமை வாய்ந்த ராமர் மற்றும் சீதையின் சிலைகள் திருடப்பட்டிருப்பதாக தெரிவித்தனர்.

இந்த திருட்டு குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக பால்கா போலீஸ் நிலைய அதிகாரி தெரிவித்தார். மேலும் கோவில் சிலைகளை திருடி சர்வதேச சந்தையில் விற்கும் கும்பல் அல்லது சிலையை உருக்கி அதிலுள்ள வெள்ளி மற்றும் தங்கத்தை எடுக்கும் உள்ளூர் திருடர்கள் இதில் ஈடுபட்டிருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காதலன் மீது கற்பழிப்பு வழக்கு தொடர்ந்த பெண் அவரது மனைவியாக கோர்ட்டில் இருந்து வெளியேறினார்!!
Next post வங்கி அதிகாரியை காதல் வலையில் வீழ்த்தி ரூ.80 லட்சம் கேட்டு மிரட்டிய எம்.பி.ஏ. மாணவி கைது!!