மிசோரம் மாநிலத்தில் 17 ஆண்டுகளாக நீடித்த மதுவிலக்கு நீக்கம்!!

Read Time:1 Minute, 14 Second

6e652529-db4c-4e08-aab5-b1bc3de93208_S_secvpfவடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மிசோரத்தில் கடந்த 17 ஆண்டுகளாக அமலில் இருந்துவந்த மதுவிலக்கு தடை சட்டம் இன்று விலக்கிக் கொள்ளப்பட்டது.

கடந்த 1995-ம் ஆண்டு இயற்றப்பட்ட அம்மாநிலத்தின் மதுவிலக்கு சட்டம் இந்த புதிய சட்டத்தின் மூலம் ரத்து செய்யப்பட்ட போதிலும், முறையாக மதுக்கடைகளை அமைத்தல் மற்றும் இதர அரசு நிர்வாகப் பணிகளை முடிக்க வேண்டியுள்ளதால் வரும் மார்ச் மாதம் முதல் இந்த புதிய சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு, முழுமையான அளவில் மதுக்கடைகள் இயங்கத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எனினும், குடித்து விட்டு பொது இடங்களில் தகராறு செய்வது, போதையில் வாகனங்களை ஓட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது மிகக் கடுமையான தண்டனை விதிக்கவும் இந்த புதிய சட்டம் வழிவகை செய்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஜெய்யை பாராட்டிய தயாரிப்பாளர்!!
Next post கொலை செய்வதாக மிரட்டி 2 மாதங்களாக இளம்பெண்ணை கற்பழித்த அண்ணன்–தம்பி கைது!!