ரெயிலில் பயணம் செய்த ஆக்கி வீராங்கனை மாயம்: பயிற்சியாளர் மீது புகார்!!

Read Time:1 Minute, 45 Second

f3e90fdb-282e-4bba-83c0-079c8941acd8_S_secvpfஉத்தரப்பிரதேச மாநிலம் பீலிபிட் நகரைச் சேர்ந்த 16 வயது மாணவி கரிஷ்மா சொங்கர். ஆக்கி வீராங்கனையான இவர் தேசிய அளவில் பல போட்டிகளில் கலந்து கொண்டார். கடந்த 3–ந் தேதி முதல் 7–ந் தேதி வரை தேசிய அளவில் பள்ளிகளுக்கு இடையேயான ஆக்கிப் போட்டி ராஞ்சியில் நடந்தது.

இதில் கரீஷ்மாவும் சக வீராங்கனைகளுடன் கலந்து கொண்டார். போட்டி முடிந்த பின்பு ராஞ்சியில் இருந்து ரெயிலில் பரேலி புறப்பட்டார். வழியில் பைசாபாத்தில் வீராங்கனைகள் அனைவரும் ரெயிலில் இருக்கிறார்களா? என்று பயிற்சியாளர் ராகுல்சிங் சரிபார்த்தார். அப்போது கரிஷ்மா இருந்தார். அதன்பிறகு பைசாபாத்தில் இருந்து பரேலி புறப்பட்டனர்.

ஆனால் கரீஷ்மா வீடு திரும்பவில்லை. அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதையடுத்து பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். அவர்கள் கரீஷ்மாவை தவறவிட்டதற்காக பயிற்சியாளர் மீது குற்றம் சாட்டினார்கள்.

மேலும் கரீஷமாவுக்கு ரெயிலில் முன்பதிவு இருக்கை ஒதுக்காமல் முன்பதிவு செய்யாத பெட்டியில் இருக்கை ஒதுக்கப்பட்டது. அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குடும்பத் தகராறில் பெண் போலீஸ் தற்கொலை முயற்சி!!
Next post எழும்பூர் பெண் போலீசுக்கு செல்போனில் தொல்லை: பெயிண்டர் கைது!!