ஹாலிவுட் பாலிவுட் ஜாலிவுட்!!
நடிகை கங்கனா ரணாவத் ஏற்கனவே ஒரு அழகு க்ரீம் விளம்பரத்துக்காக நடிக்கக் கேட்டபோது, ‘இது பெண்களை அவமானப்படுத்தும் விளம்பரம்’ என நடிக்க மறுத்தார். இப்போது ஒரு ஃபாஸ்ட் ஃபுட் நிறுவனம், தங்கள் விளம்பரத் தூதராக இருப்பதற்கு ஐந்து கோடி ரூபாய் தருவதாகச் சொன்னது. ‘‘உங்கள் நிறுவனத்தின் நம்பகத்தன்மை பற்றி விசாரித்து விட்டுகான்டிராக்டில் கையெழுத்து போடுகிறேன்’’ என்றிருக்கிறார் கங்கனா.
டாம் க்ரூஸின் முன்னாள் மனைவியான கேத்தி ஹோம்ஸ், இப்போது டைரக்டர் அவதாரம் எடுக்க ரெடியாகிறார். க்ரூஸுடனான தனது ஆறாண்டு வாழ்க்கையை வைத்து படத்துக்குக் கதை எழுதுகிறாராம். பதற்றத்தில் தவிக்கிறார் டாம் க்ரூஸ்.
சோனம் கபூருக்கும் சோனாக்ஷி சின்ஹாவுக்கும் சுத்தமாக ஆகாது. சல்மான் கான் படங்களில் அடுத்தடுத்து நடித்தபோது சல்மானும் சகோதரர்களும் சோனாக்ஷியைக் கொண்டாடினார்கள். இப்போது சோனம் கபூரின் ரவுண்ட்! சல்மானின் சகோதரருடன் நடித்த சோனம், அடுத்து சல்மான் கானுடன் நடிக்கப் போகிறார். படங்களின் புரொமோஷனுக்காக சல்மான் சகோதரர்களுடன் ஊர் ஊராகப் போகிறார் சோனம். வழக்கமாக இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளுக்கு சல்மானின் முன்னாள் ஹீரோயின்கள் வருவார்கள். ஆனால் சோனம் இருப்பதால் சோனாக்ஷி தவிர்த்து விட்டார்.
தனது ‘பிகே’ படத்தின் புரொமோஷனுக்காக வாரணாசி போன அமீர் கான், ஒரு கடைக்குள் ஏறி ஒரு மணி நேரம் செலவிட்டு அழகான ஒரு பனாரஸ் பட்டுப் புடவையை செலக்ட் செய்தார். அது, படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த அனுஷ்கா சர்மாவுக்கு அன்புப் பரிசு!
திறமையான நடிகை, தரமான இயக்குனர் என பெயர் வாங்கியிருந்தாலும், ‘‘நான் ஒரு மோசமான எடிட்டர்’’ என்கிறார் ஏஞ்சலினா ஜோலி. லேட்டஸ்ட்டாக அவர் இயக்கிய
‘அன்புரோக்கன்’ படத்தில் நீளம் கருதி நிறைய காட்சிகளை வெட்ட வேண்டி இருக்கிறதாம். எடிட்டரோடு உட்கார்ந்தபோது எதையும் வெட்ட விடவில்லை ஜோலி. கடைசியில், அவருக்குத் தெரியாமல் நீளம் குறைத்தார்கள்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating