நடுவானில் விமானத்தை உடைக்க முயன்ற இராணுவ வீரர்: நடந்தது என்ன?

Read Time:2 Minute, 5 Second

damaging_flight_002அமெரிக்காவில் விமானம் ஒன்றை முன்னாள் இராணுவ வீரர் ஒருவர் உடைக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் புளோரிடா(Florida) மாகாணத்திலிருந்து மான்சஸ்டருக்கு(Manchester) புறப்பட்ட தோம்ஸன் டிரிம்லைனர்(Thomson Dreamliner) போயிங் 787 விமானத்தில் நிகோலஸ் விட்டேக்கர்(Nicholas Whittaker Age-44) என்ற முன்னாள் இராணுவ வீரரும் பயணித்துள்ளார்.

இவர் விமானம் புறப்பட்டு, சுமார் 35,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருக்கும் வேளையில் திடீரென விமானத்தின் ஜன்னலை உடைக்க முயன்றுள்ளார்.

இதில் விமானத்தில் மேல் பாகம் சிறிது உடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பதறிய பயணிகள் கூச்சலிட்டுள்ளனர்.

மேலும் இவரது இருக்கைக்கு பின்னால் அமர்ந்திருந்த நரம்பு கோளாறால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் அழத் தொடங்கியுள்ளனர்.

இதனையடுத்து விமானம் புளோரிடாவுக்கே திருப்பப்பட்டு அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நிகோலஸை கைது செய்த பொலிசார் அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தியுள்ளனர்.

விசாரணையில், நான் இவ்வாறு ஒரு செயலை செய்தது எனக்கே தெரியாது என்றும் நான் தீவிரவாதி அல்ல எனவும் நிகோலஸ் தெரிவித்துள்ளார்.

ஆனால் இதனை ஏற்க பயணிகள் மறுத்துள்ளனர். இதற்கிடையே பயணிகள் அனைவரும் பத்திரமாக தரையிறக்கப்பட்டுள்ளதாக விமானி கூறியுள்ளார்.
http://www.dailymail.co.uk/video/news/video-1140876/Dreamliner-passenger-says-theres-no-justification-punch.html

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஓநாய் போல் விசிலடித்து கேலி செய்த இளைஞருக்கு செருப்படி கொடுத்த பெண்கள்!!
Next post வெற்றி, தோல்வியை கடந்தும் சிந்திக்க வேண்டிய தேவை உள்ளது -எம். பௌஸர்!!