பழனி அருகே கொலை வழக்கில் வாலிபர் கைது!!

Read Time:3 Minute, 12 Second

7e0cac4e-1fa0-4282-aeb1-a9f53f092ce8_S_secvpfபழனி அருகில் உள்ள இரவிமங்கலத்தை சேர்ந்த சின்னகருப்பன் மகன் காளீஸ்வரன் (வயது22). செங்கல்சூளையில் வேலை பார்த்து வந்தார். கடந்த 3–ந் தேதி பச்சையாறு ஓடைப்பகுதியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து பழனி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

தனது மகன் சாவில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் நண்பர்கள் மற்றும் அவருடன் வேலை செய்தவர்களிடம் போலீசார் விசாரித்து வந்தனர்.

அப்போது காளீஸ்வரனின் உறவினரான மருதமுத்து என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம் போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. போலீசாரிடம் மருதமுத்து அளித்த வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:–

எனக்கும் சின்னகாந்தி புரத்தை சேர்ந்த சக்திவேல் மனைவி மகேஸ்வரி (22) என்பவருக்கும் கள்ளக்காதல் இருந்து வந்தது. இது காளீஸ்வரனுக்கு தெரியும். ஆனால் எனக்கு தெரியாமல் மகேஸ்வரியை மிரட்டி அவருடன் நெருக்கமாக பழகிவந்தார். இந்த விஷயம் எனக்கு தெரிய வரவே காளீஸ்வரனை தட்டிக்கேட்டேன்.

மகேஸ்வரியின் தொடர்பை விட்டு விடுமாறு பலமுறை கூறியும் அவர் கேட்கவில்லை. இதனால் காளீஸ்வரனை தீர்த்துகட்ட முடிவு செய்தேன். கடந்த டிசம்பர் 31–ந் தேதி புத்தாண்டு பிறப்பன்று நண்பர்களுடன் பேசிவிட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தேன். பச்சையாற்று ஓடைப் பகுதியில் காளீஸ்வரனும், மகேஸ்வரியும் உல்லாசமாக இருந்தனர். இதை பார்த்ததும் எனக்கு ஆத்திரம் தலைக்கேறியது. அவரிடம் தகராறு செய்தேன். இதை பார்த்ததும் மகேஸ்வரி அங்கிருந்து ஓடிவிட்டார். அதன்பிறகு காளீஸ்வரன் கழுத்தை நெறித்து கொன்று விட்டு ஆற்றுப்பகுதியில் வீசிவிட்டேன்.

பின்னர் யாருக்கும் சந்தேகம் வராதபடி மறுநாளே நான் வேலைக்கு வந்து விட்டேன். 3 நாட்கள் கழித்துதான் காளீஸ்வரன் உடல் எடுக்கப்பட்டது. மேலும் போலீசார் விசாரணையில் என்னால் தப்பிக்க முடியவில்லை என்று தெரிவித்தார். இதனையடுத்து போலீசார் மருதமுத்துவை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ரிமாண்ட் செய்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஓரினத் திருமணம் செய்யப்போகும் பிரபல நடிகர்கள்!!
Next post சிங்கை அருகே தனியாக இருந்த பெண்ணை கற்பழிக்க முயன்ற மின் ஊழியர் கைது!!