மதம் பிடித்த யானை மிதித்து 14 வயது டெல்லி சிறுமி பலி!!

Read Time:1 Minute, 38 Second

745284b9-8247-43ef-be53-05057d65bc60_S_secvpfஉத்தரகாண்ட் மாநிலம், பவுரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற நீலகண்டர் கோயில் உள்ளது. மிக பழமையான இந்த சிவன் கோயிலுக்கு சாதாரணமாக சாலை மார்க்கமாகவே பக்தர்கள் செல்வர்.

ஆனால், டெல்லியை சேர்ந்த ஆஷிஷ் ராஜ் சவுத்ரி என்பவர், தனது குடும்பத்தாருடன் பழைமையான காட்டுப்பாதை வழியாக நடைப்பயணமாக சென்று நீலகண்டரை தரிசிக்க விரும்பினார். இதன்படி, டேராடூனில் இருந்து வனப்பகுதிக்குள் நடந்து சென்ற அந்த குடும்பம் நேற்று ராஜாஜி தேசிய பூங்கா அமைந்துள்ள வனப்பகுதியை அடைந்தது.

அப்போது, பெரியவர்கள் பின்னால் நடந்துவர சிறுமி மோமிட்டா(14) மற்றும் அவளது மைத்துனி ஆகியோர் முன்னால் சென்று கொண்டிருந்தனர். திடீரென்று, அவர்கள் அலறியடித்து ஓடி வந்தனர். பின்னால் ஒரு பெரிய காட்டு யானை பயங்கரமாக பிளிறியபடி அவர்களை விரட்டி வந்தது.

யானையிடம் இருந்து பிடிபடாமல் இருக்க பெற்றோரை நோக்கி வேகமாக ஓடிவந்த மோமிட்டா கால் தடுக்கி கீழே விழுந்தாள். பின்னால் ஓடிவந்த யானை ஆவேசத்துடன் அவளை மிதித்து நசுக்கிக் கொன்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தற்கொலை செய்து கொள்ளும் டி.வி. சீரியல் காட்சியை ஒத்திகை பார்த்த 9 வயது சிறுவன் பரிதாப பலி!!
Next post ஓரினத் திருமணம் செய்யப்போகும் பிரபல நடிகர்கள்!!