அமிதாப்பச்சனுக்கு நாகேஸ்வரராவ் விருது!!
ஐதராபாத்தில் பிரபல தெலுங்கு நடிகர் நாகேஸ்வரராவ் பெயரிலான விருது வழங்கும் விழா நடந்தது. அக்கினேனி இன்டர்நேசனல் பவுண்டேசன் சார்பில் நடந்த இந்த விழாவில் நடிகர் நாகேஸ்வரராவின் மகன் நடிகர் நாகார்ஜூனா, அவரது மனைவி அமலா, மகன்களும், நடிகர்களுமான நாகசைதன்யா, அகில் உள்பட குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
விழாவில் பிரபல இந்தி நடிகர் அமிதாப்பச்சன் கலந்து கொண்டார். அவருக்கு நாகேஸ்வரராவ் விருது வழங்கப்பட்டது. தெலுங்கானா முதல்–மந்திரி சந்திரசேகரராவ் விருதை வழங்கினார். விழாவில் அமிதாப்பச்சன் பேசும்போது, ‘‘இந்த விருதை பெறுவதன் மூலம் நான் பெருமை அடைகிறேன்’’ என்றார்.
பின்னர் அவர் முதல்– மந்திரி சந்திரசேகரராவை அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசினார். இருவரும் 30 நிமிடம் பேசிக்கொண்டு இருந்தனர். தெலுங்கானா மாநிலம் உருவாக சந்திரசேகர ராவ் எடுத்துக்கொண்ட முயற்சியை அமித்தாப்பச்சன் பாராட்டினார்.
மேலும் தெலுங்கானா முதல் மந்திரியாக பதவி ஏற்றதையொட்டி அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். ஐதராபாத் நகரம் இன்டர்நேசனல் நகரமாக மாறவும், மாநில வளர்ச்சிக்கு தேவையான உதவிகளை செய்யவும் தயார் என்று சந்திரசேகரராவிடம் அமிதாப் உறுதி அளித்தார். ஐதராபாத் புறநகரில் 2 ஆயிரம் ஏக்கரில் ஹாலிவுட் தரத்துக்கு இணையாக பிரமாண்ட திரைப்பட நகரம் உருவாக்கப்பட உள்ளது. இதற்கு தேவையான உதவிகளை செய்யுமாறு அமிதாப்பிடம் சந்திரசேகர ராவ் கேட்டுக் கொண்டார்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating