இன்று அச்சமின்றி வௌிவரும் சர்ச்சைக்குரிய இன்டர்வியூ!!

Read Time:2 Minute, 49 Second

Untitled-134வடகொரியாவின் மிரட்டலுக்கு அஞ்சாத சோனி, கிறிஸ்மஸ் தினமான இன்று, அமெரிக்க திரையரங்குகளில், சர்சைக்குரிய, ‘இன்டர்வியூ’ திரைப்படத்தை வெளியிடுவதாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து, சோனி பிக்சர்ஸ் தலைமை செயல் அதிகாரி மைக்கேல் லின்டன் வெளியிட்டுள்ள அறிக்கை: பேச்சுரிமையை நசுக்க முயன்றோருக்கு எதிரான முதல் முயற்சியாக, இப்படத்தை வெளியிட உள்ளோம். பொதுமக்களுக்காக இப்படத்தை திரையிடுவதில் பெருமை கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

சோனியின் முடிவை அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா வரவேற்றுள்ளார். ”பேச்சுரிமைக்கும், படைப்பாளிகளின் கருத்து சுதந்திரத்திற்கும் எப்போதும் மதிப்பளிக்கும் நாடாக, அமெரிக்கா திகழ்கிறது. சோனி மற்றும் திரையரங்குகள் எடுத்துள்ள முடிவு, இத்திரைப்படத்தை காண்பதற்கான சுதந்திரத்தை மக்களுக்கு வழங்கியுள்ளது. அமெரிக்க அரசு இதை வரவேற்கிறது” என, வெள்ளை மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது.

சி.ஐ.ஏ., அனுப்பும் இரு பத்திரிகையாளர்கள் வடகொரிய தலைவரைக் கொல்ல முயற்சிப்பது தான், ‘இன்டர்வியூ’ படத்தின் கரு. இப்படம் வெளியானால், மோசமான விளைவுகளை அமெரிக்க மக்கள் சந்திக்க நேரும் என, கம்யூட்டர் நாசக்காரர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

இதன் பின்னணியில் வடகொரியா உள்ளதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியிருந்தது. மிரட்டல் காரணமாக, கிறிஸ்மஸ் அன்று, அமெரிக்காவில், 1,000 திரையரங்குகளில் வெளியாவதாக இருந்த ‘இன்டர்வியூ’ படம், இரத்து செய்யப்பட்டதாக சோனி அறிவித்திருந்தது.

இதற்கு ஒபாமா மற்றும் அமெரிக்க செனட் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, தற்போது, முதற்கட்டமாக, 200 திரையரங்குகளில் மட்டும் இப்படம் இன்று வெளியாகிறது. இதையொட்டி, அந்த திரையரங்குகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திஸ்ஸவிடம் நஸ்டஈடு கோரும் மைத்திரி!!
Next post என்னை அறிந்தால் பாடல்கள் டிசம்பர் 31 நள்ளிரவில்!!