நீலாங்கரையில் காதலனுடன் கடற்கரைக்கு சென்ற கல்லூரி மாணவி கடத்தி கற்பழிப்பு!!
சென்னையில் கிழக்கு கடற்கரை சாலையில் நடந்துள்ள இந்த பரபரப்பான சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:–
தாம்பரம் அருகே உள்ள சேலையூரை சேர்ந்தவர் பூவரசி(வயது 18) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் நேற்று மாலை 5 மணி அளவில் நீலாங்கரை அருகே உள்ள அக்கறை சோதனை சாவடியையொட்டியுள்ள கடற்கரையில் தனது காதலனுடன் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக டிப்–டாப்பாக உடை அணிந்து கொண்டு வாலிபர் ஒருவர் வந்தார். பூவரசியும், அவரது காதலனும் தனிமையில் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பதை பார்த்த அந்த வாலிபர் அவர்களின் அருகில் சென்று பேச்சு கொடுத்தார்.
நீங்கள் யார்? இங்கிருந்து ஏன் பேசிக் கொண்டிருக்கிறீர்கள். நான் சோழிங்கநல்லூர் போலீஸ் நிலையத்தில் இருந்து வருகிறேன். இந்த இடம் பாதுகாப்பானது இல்லை என்று கூறினார்.
மேலும் பூவரசியிடம், சோழிங்கநல்லூர் போலீஸ் நிலையம் சப்–இன்ஸ்பெக்டர் ஒருவரிடம் உங்களை பற்றிய தகவல்களை கூறிவிட்டு சென்றுவிடுங்கள் என்று கூறினார்.
இதனை நம்பிய பூவரசி, போலீஸ் என்று கூறிய வாலிபருடன் மோட்டார் சைக்கிளில் ஏறிச் சென்றார்.
இதையடுத்து அந்த வாலிபர் பூவரசியை அருகில் இருந்த தங்கும் விடுதி ஒன்றுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போதுதான் பூவரசி ஏமாற்றப்பட்டதை உணர்ந்துள்ளார். டிப்–டாப் வாலிபரிடமிருந்து பூவரசி தப்பிக்க முயன்றார். ஆனால் அந்த வாலிபர் அவரை மிரட்டி விடுதியில் உள்ள ஒரு அறையில் அடைத்து வைத்தார்.
பின்னர் பூவரசியின் கை, கால்களை கட்டிப்போட்ட வாலிபர் அவருக்கு செக்ஸ் தொல்லை கொடுத்து கற்பழித்ததாக கூறப்படுகிறது.
இதுபற்றி வெளியில் யாரிடமாவது சொன்னால் கொன்று விடுவேன் என்று பூவரசியை மிரட்டிய வாலிபர், அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் அவரை அழைத்து வந்து சாலையோரமாக இறக்கி விட்டு விட்டு தப்பிச் சென்றுவிட்டார்.
இச்சம்பவம் குறித்து நேற்று இரவு பூவரசி, நீலாங்கரை போலீசில் புகார் செய்தார். உதவி கமிஷனர் சங்கர், இன்ஸ்பெக்டர் பாஸ்கர் ஆகியோர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:–
கற்பழிப்பு புகார் கொடுத்துள்ள பெண்ணின் பெற்றோர், புகார் எதுவும் வேண்டாம் என்று கூறினர். அவர்கள் கூறும் சில விஷயங்கள் அப்பெண்ணின் மீதே சந்தேகத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது.
இருப்பினும் அது தொடர்பான விஷயங்களில் நாங்கள் தீவிரம் காட்டவில்லை. பாதிக்கப்பட்டதாக கூறப்படும் பெண்ணின் புகார் தொடர்பாக தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறோம்.
கற்பழிப்பு புகார் கொடுத்துள்ள பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட உள்ளது. அப்பெண்ணின் காதலனிடமும் தீவிரமாக விசாரித்து வருகிறோம்.
அதே நேரத்தில் போலீஸ் என்று கூறி ஏமாற்றி இச்சம்பவத்தில் ஈடுபட்ட வாலிபர் யார்? என்பது பற்றி தீவிரமாக விசாரித்து வருகிறோம். அவர் விரைவில் கைது செய்யப்படுவார்.
இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.
Average Rating