முதியோர் பென்ஷன் வாங்க வரிசையில் நின்ற மூதாட்டி நெரிசலில் சிக்கி சாவு!!

Read Time:1 Minute, 21 Second

b592cfa6-191e-4e91-81ae-b6203b52a990_S_secvpfஆந்திராவில் முதியோர் பென்ஷன் தொகை தபால் நிலையங்கள் மூலம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் தபால் நிலையங்களில் கூட்டம் அலைமோதுகிறது.

விஜயவாடா மாவட்டம் விஞ்சி பேட்டையில் உள்ள தபால் நிலையத்தில் பென்ஷன் தொகைக்கான டோக்கன் வழங்கப்பட்டது. இதை வாங்குவதற்காக அதிகாலை 3 மணியில் இருந்து முதியவர்கள் காத்திருந்தனர்.

75 வயதான ஜெய்பீ என்ற மூதாட்டியும் காத்து இருந்தார். காலை முதல் மாலை வரை அவர் வரிசையில் நின்று இருந்ததால் மிகவும் சோர்வடைந்து காணப்பட்டார்.

திடீரென டோக்கன் வாங்குவதற்காக கூட்டத்தினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் சிக்கி ஜெய்பீ கீழே விழுந்தார். கூட்டத்தினர் மிதித்ததில் அவர் மூச்சு திணறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த முதல் – மந்திரி சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெண்கள் இடது பக்கம் தான், “மூக்குத்தி” அணிய வேண்டுமா…?
Next post பட வாய்ப்புக்காக புகைப்படங்களை தூது அனுப்பும் நடிகை!!