தேசிய அரசாங்கத்தில் கூட்டமைப்பினருக்கு அமைச்சு பதவியாம்? தமிழர்களின் வாக்குகள் யாருக்கு கிடைக்கும்?? (கட்டுரை)

Read Time:26 Minute, 31 Second

timthumbவ­டக்கு–கிழக்கு மாகா­ணங்­களை இணைக்­க­மாட்டோம். மாகாண சபைக்கு பொலிஸ் அதி­கா­ரங்­க­ளையும் வழங்­கப்­போவதில்லை. இதுதான், இந்த அர­சாங்­கத்தின் தெளி­வான கொள்கை. இந்த விட­யங்கள் தொடர்பில் எதி­ரணி வேட்­பா­ளரின் நிலைப்­பாடு என்ன என்று அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் வினா எழுப்­பி­யி­ருக்­கின்றார்.

அது மட்­டு­மல்­லாமல், 13 ஆவது அர­சி­ய­ல­மைப்பு திருத்தச் சட்டம் குறித்து பொது வேட்­பா­ள­ரா­கிய மைத்­தி­ரி­பால சிறி­சேன என்ன கொள்­கையைக் கொண்­டி­ருக்­கின்றார் என்றும் அமைச்சர் பீரிஸ் வின­வி­யி­ருக்­கின்றார்.

வடக்கு கிழக்கு இணைப்பு, மாகாண சபைக்கு பொலிஸ் அதி­கா­ரங்கள், 13 ஆவது அர­சி­ய­ல­மைப்பு திருத்தச் சட்டம் என்­பன தமிழ் மக்­களின் அர­சியல் உரி­மை­க­ளோடும், அவர்கள் கோருகின்ற சுய­நிர்­ணய உரி­மை­யுடன் கூடிய சுயாட்சி என்ற விட­யங்­க­ளோடும் நேர­டி­யாகத் தொடர்­பு­பட்ட விட­யங்­க­ளாகும்.

இந்த விட­யங்­களில் எதி­ர­ணி­யி­ன­ரு­டைய நிலைப்­பாடு என்ன என்­பதை சிங்­கள மக்­க­ளுக்குத் தெளி­வு­ப­டுத்த பொது வேட்பாளர் முன்­வர வேண்டும் என்­பதே அமைச்சர் பீரிஸின் கோரிக்­கை­யாகும்.

தமி­ழர்­க­ளுக்­கான அர­சியல் உரி­மை­க­ளுடன் சம்­பந்­தப்­பட்ட விட­யங்கள் எத­னையும் நாங்கள் அவர்­க­ளுக்கு வழங்க மாட்டோம்.

நீங்கள் அந்த உரி­மை­களை அவர்­க­ளுக்கு வழங்கப் போகின்­றீர்­களா என்று மறை­மு­க­மாக அமைச்சர் பீரிஸ் எதி­ர­ணி­யி­ன­ரிடம் கேள்வி எழுப்­பி­யி­ருக்­கின்றார்.

சிங்­களப் பேரி­ன­வாத அரசானது தமிழ் மக்­க­ளுக்கு எத­னையும் கொடுக்கக் கூடாது. அவ்­வாறு அர­சியல் உரி­மைகள் வழங்கப்ப­டு­மானால், அது சிங்­கள மக்­க­ளையும் சிங்­கள தேசத்­தையும் காட்டிக் கொடுக்­கின்ற கைங்­க­ரி­ய­மாகும் என்­பதை அமைச்­ச­ரு­டைய கூற்று தெளி­வாக வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது.

தமிழ் மக்­க­ளுக்கு எத­னையும் கொடுக்கக் கூடாது என்று நாங்கள் தீர்­மா­னித்­தி­ருக்­கின்­ற­போது, எதி­ர­ணி­யினர் அவர்­க­ளுடன் கூடி குலா­வு­கின்­றார்கள்.

தமி­ழர்கள் முன்­வைத்­துள்ள கோரிக்­கை­களை நிறை­வேற்றும் வகையில் அவர்­க­ளுடன் ஒப்­பந்தம் செய்­வ­தற்குத் தயாராகின்றார்கள்.

ஆகவே, அவர்­களை நீங்கள் இந்தத் தேர்­தலில் நிரா­க­ரித்து, தமிழ் மக்­க­ளு­டைய உரி­மை­களை மறுக்­கின்ற எமக்கு – எமது வேட்­பா­ள­ரா­கிய ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷவுக்கு வாக்­க­ளிக்க வேண்டும் என்­பதே அமைச்சர் பீரிஸின் கோரிக்கையாகும்.

தமி­ழர்­களின் அர­சியல் உரி­மைகள் சார்ந்த விட­யங்­களில் எதி­ர­ணி­யி­ன­ரு­டைய நிலைப்­பாடு குறித்து அரா­சங்கத் தரப்பிலிருந்து அமைச்சர் பீரிஸ் எழுப்­பி­யுள்ள கேள்­வி­களின் பின்னால் இன்னும் பல விட­யங்கள் புதைந்து கிடக்­கின்­றன.

அரசாங்கத் தரப்பில் இருந்து இந்தக் கேள்­விகள் எதி­ர­ணி­யினர் மீது பாய்ந்­தி­ருப்­பதை ஒரு வகையில் சுவா­ர­சி­ய­மான விடயமா­கவும் நோக்­கலாம்.

அதே­நே­ரத்தில் இந்தக் கேள்­விகள் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்­பி­னரை நோக்கி – இலங்கைத் தமி­ழ­ரசுக் கட்­சி­யி­னரை நோக்கி எழுப்­பப்­பட்­டி­ருக்க வேண்டும்.

இந்த விட­யங்­களில் அர­சாங்கம் ஏற்­க­னவே தெளி­வா­ன­தொரு நிலைப்­பாட்டில் இருக்­கும்­போது, ஆட்சி மாற்­றத்தை ஏற்படுத்து­வ­தற்­காகக் கங்­கணம் கட்­டிக்­கொண்டு களத்தில் குதித்­துள்ள எதி­ர­ணி­யினர் என்ன நிலைப்­பாட்டைக் கொண்டிருக்கின்றார்கள் என்­பதை தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்­பி­னரும், இலங்கைத் தமி­ழ­ரசுக் கட்­சி­யி­னரும் கேட்டறிந்திருக்கின்­றார்­களா? என்­பதைத் தமிழ் மக்­க­ளுக்கு அவர்கள் தெளி­வு­ப­டுத்த வேண்டும். இது முக்­கி­ய­மா­ன­தொரு விட­ய­மாகும்.

தமிழ் மக்­க­ளுக்கு ஏன் தெளி­வு­ப­டுத்த வேண்டும்?

தமிழ் மக்­க­ளு­டைய அன்­றாடப் பிரச்­சி­னைகள், அர­சியல் பிரச்­சி­னைகள் என்­ப­வற்றை முன்­வைத்தே தமிழ்த்­தே­சிய கூட்டமைப்­பினர் தமிழ் மக்­க­ளிடம் வாக்கு கேட்­பது வழக்கம்.

ஆனால் இந்தத் – ஏழா­வது ஜனா­தி­பதி தேர்தல் அந்த வரை­ய­றைக்கு அப்­பாற்­பட்­டி­ருக்­கின்­றது. ஆட்சி மாற்றம் வேண்­டுமா வேண்­டாமா? என்ற கேள்­விக்குப் பதி­ல­ளிக்­கின்ற ஒரு தேர்­த­லாக இது அமைந்­தி­ருக்­கின்­றது.

ஆட்சி மாற்றம் தேவை என்­பதில், தமிழ் மக்­க­ளுக்கு மாற்று கருத்து எதுவும் இருக்க முடி­யாது. ஏனெனில், ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷவின் அர­சியல் கொள்­கைகள் தமிழ் மக்­க­ளு­டைய உட­னடி தேவை­களை – அர­சியல் தேவை­களை பூர்த்தி செய்­யத்­தக்­க­வை­யல்ல.

யுத்தம் முடி­வ­டைந்து ஐந்து வரு­டங்­க­ளுக்கு மேலா­கின்ற போதிலும், யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட தமிழ் மக்­க­ளு­டைய மீள்கு­டி­யேற்றம், மீள்­கு­டி­யே­றி­யுள்ள மக்­களின் வாழ்­வா­தாரம் என்­பன இன்னும் சரி­யாக நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை.

அத்­துடன், யுத்தம் முடிந்­து­விட்ட போதிலும், இரா­ணு­வத்தின் பிடியில் இருந்து அவர்கள் இன்னும் விடு­ப­ட­வில்லை. மாறாக இரா­ணு­வத்தின் பிடிக்குள் நாளுக்கு நாள் அவர்கள் இறுகிச் செல்­கின்ற போக்­கையே இந்த அர­சாங்கம் கடைப்­பி­டித்து வருகின்­றது.

இந்த அரசும், அதன் தலை­வ­ரா­கிய ஜனா­தி­ப­தியும் தமது சுய அர­சியல் நலன்­க­ளுக்­கா­கவே தமிழ் மக்­களின் வாக்­கு­களைப் பயன்­ப­டுத்த முனைந்­தி­ருக்­கின்­றார்­களே தவிர அவர்­க­ளுக்கு நிம்­ம­தி­யான உரி­மை­க­ளுடன் கூடிய வாழ்க்­கையை உரு­வாக்கிக் கொடுப்­ப­தற்கு முன்­வ­ரவே இல்லை.

முப்­பது வரு­டங்­க­ளாகத் தொடர்ந்த ஒரு மோச­மான யுத்தம் – சரியோ, பிழையோ ஒரு முடி­வுக்கு வந்து நாட்டில் அமைதி ஏற்பட்­டி­ருக்­கின்­றது.

யுத்தம் முடிந்த பின்­ன­ரா­வது, தமது பிரச்­சி­னை­க­ளுக்கு ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷவும், அவ­ரு­டைய அர­சாங்­கமும் ஓர் அர­சியல் தீர்வை ஏற்­ப­டுத்­து­வார்கள் என்று யுத்தப் பாதிப்­பு­க­ளுக்கு நேர­டி­யா­கவும், மறை­மு­க­மா­கவும் முகம் கொடுத்த மக்கள் ஆவ­லோடு எதிர்­பார்த்­தி­ருந்­தார்கள்.

அர­சியல் தீர்வை நோக்கி இந்த அர­சாங்கம் இன்று செல்லும் நாளை செல்லும் என்று அவர்கள், கடந்த ஐந்­தரை வரு­டங்­க­ளுக்கு மேலாக எதிர்­பார்த்து, எதிர்­பார்த்து ஏமாற்­ற­ம­டைந்­தார்­களே தவிர, அவர்­களின் மன நிலையைப் புரிந்து கொண்டு அரசாங்கம் உரிய முறையில் செயற்­ப­டவே இல்லை.

தமிழ் மக்கள் தமது எதிர்­பார்ப்­புக்கள், அபி­லா­ஷைகள், பிரச்­சி­னைகள் என்­ப­வற்றை பல்­வேறு வழி­களின் ஊடா­கவும் அர­சாங்­கத்தின் கவ­னத்­திற்குக் கொண்டு வந்­தார்கள்.

தமது எதிர்­பார்ப்­புக்­களை நிறை­வேற்ற வேண்டும், பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண முன்­வ­ர­வேண்டும் என்­பதை அடுத்தடுத்து வந்த தேர்­தல்­களில் வாக்­க­ளித்த முறை­மையின் கீழ் அர­சுக்கு அவர்கள் ஆழ­மாக உணர்த்­தி­யி­ருந்­தார்கள். இருந்த போதிலும், அர­சாங்கம் அதனை கவ­னத்தில் எடுத்துச் செயற்­பட்­ட­தாகத் தெரி­ய­வில்லை.

தமிழ் மக்கள் தொடர்பில் அர­சாங்கம் கொண்­டுள்ள நிலைப்­பாட்டில் தமக்கு உடன்­பா­டில்லை என்­பதை வெளிப்­ப­டுத்­து­வ­தற்­கா­கவே, கடந்த கால தேர்­தல்­களில் அவர்கள் அர­சாங்­கத்­திற்கு எதி­ராக வாக்­க­ளித்து வந்­துள்­ளார்கள்.

இந்தத் தேர்­த­லிலும் அவர்கள் எதிர்த்து வாக்­க­ளிக்க மாட்­டார்கள் என்று சொல்­வ­தற்­கில்லை. ஆனால், இந்தத் தேர்­தலில் தமது பிர­தி­நி­திகள் என சொல்­லக்­கூ­டிய எவரும் முக்­கிய வேட்­பா­ள­ராகப் போட்­டி­யி­ட­வில்லை.

பேரி­ன­வாத சிங்­களக் கட்­சி­களைச் சேர்ந்­த­வர்­களே இந்தத் தேர்­தலின் இரண்டு முக்­கிய வேட்­பா­ளர்­க­ளாகத் திகழ்­கின்­றார்கள். இந்த இரு­வரில் ஒருவர் குறித்து ஏற்­க­னவே தமிழ் மக்கள் ஒரு முடிவைக் கொண்­டி­ருக்­கின்­றார்கள்.

ஆட்சி மாற்றம் ஒன்று தேவை என்­ப­தற்­காக மற்ற வேட்­பா­ள­ருக்கு வாக்­க­ளிப்­ப­தனால் ஏற்­படப் போகின்ற மாற்­றங்கள் அல்­லது நன்­மைகள் என்ன என்­ப­தையும் அவர்கள் தெரிந்து கொள்ள விரும்­பு­வார்கள்.

அந்த விருப்­பத்தை நிறை­வேற்ற வேண்­டி­யது தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்­பி­ன­ரதும், இலங்கைத் தமி­ழ­ரசுக் கட்­சி­யி­ன­ரதும் கடமை­யல்­லவா?

இத்­த­கைய ஒரு நிலை­மையில் தமிழ் மக்­க­ளு­டைய அன்­றாடப் பிரச்­சி­னைகள், அர­சியல் பிரச்­சி­னைகள் தொடர்பில் எதிரணியின் பொது வேட்­பாளர் என்ன நிலைப்­பாட்டைக் கொண்­டி­ருக்கின்றார், எதி­ர­ணி­யினர் என்ன நிலைப்­பாட்டை எடுத்­தி­ருக்கின்­றார்கள்? என்­பதைக் கண்­ட­றிந்து தெளி­வு­ப­டுத்த வேண்­டி­யது, தமிழ் மக்­களின் தலை­வர்­களின் தலை­யாய கடமையாகும்.

அந்த பொறுப்பை அவர்கள் தட்­டிக்­க­ழிக்க முடி­யாது. அதே­போன்று அவர்கள் ஏனோ­தானோ என்று, இந்த விட­யத்தில் நடந்து கொள்­ளவும் முடி­யாது.

என்ன நடக்­கின்­றது?

தமிழ் மக்­க­ளு­டைய பிரச்­சி­னை­க­ளுடன் சம்­பந்­தப்­பட்ட விட­யங்­களில் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்­பினர் எதி­ர­ணி­யி­ன­ருடன் ஒப்­பந்தம் செய்து கொண்­டி­ருக்­கின்­றார்கள் என்ற குற்­றச்­சாட்டை அரச தரப்­பினர் தொடர்ச்­சி­யாக சுமத்தி வரு­கின்­றார்கள்.

அத்­த­கைய ஒப்­பந்தம் எதுவும் செய்து கொள்­ளப்­ப­ட­வில்லை என்று இலங்கைத் தமி­ழ­ரசுக் கட்­சியின் தலை­வரும் பாராளு மன்ற உறுப்­பி­ன­ரு­மா­கிய மாவை சேனா­தி­ராஜா, வவு­னி­யாவில் நடை­பெற்ற அந்தக் கட்­சியின் மத்­தி­ய­குழு கூட்­டத்தின் பின்னர் செய்­தி­யா­ளர்­க­ளிடம் பேசு­கையில், எதி­ர­ணி­யி­ன­ருடன் கூட்­ட­மைப்பு எந்­த­வி­த­மான ஒப்­பந்­தமும் செய்து கொள்­ள­வில்லை என்று மறுத்­து­ரைத்­தி­ருக்­கின்றார்.

அதே­போன்று பாராளு­மன்ற உறுப்­பினர் சுமந்­தி­ரனும், அம்­பா­றையில் இடம்­பெற்ற பிர­தேச சபை மற்றும் மாகா­ண­சபை உறுப்­பி­னர்கள் கலந்து கொண்ட கூட்­டத்தின் பின்னர் இடம்­பெற்ற செய்­தி­யா­ளர்­க­ளு­ட­னான சந்­திப்­பின்­போது இர­க­சிய ஒப்பந்தம் எதுவும் செய்து கொள்­ளப்­ப­ட­வில்லை.

அவ்­வாறு ஒப்­பந்தம் செய்து கொண்­ட­தற்­கான சாட்­சி­ய­மி­ருந்தால் அதனை வெளி­யி­டு­மாறு ஜனா­தி­ப­திக்கு பகி­ரங்­க­மாக சவால் விடுத்­துள்ளார்.

தமிழ் மக்­களின் தலை­வர்­க­ளா­கிய தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்­பினர் அந்த மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண்­ப­தற்கும், அந்த மக்­களின் தேவை­களைப் பூர்த்தி செய்­வ­தற்கும் தேவை­யான நட­வ­டிக்­கை­களை எடுக்க வேண்­டி­யது அவர்­களின் கடமை­யாகும்.

அந்த வகையில் தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­களை அரச தரப்­பினர் புறந்­தள்ளி நடக்­கின்­ற­போது, வேறு தரப்­பி­ன­ருடன் ஒப்­பந்தங்கள் செய்து கொள்­வதில் தவ­றேதும் இருக்க முடி­யாது.

அவ்­வாறு ஒப்­பந்­தங்கள் செய்யக் கூடாது என்று எவரும் அவர்­க­ளுக்கு உத்­த­ர­வி­டவும் முடி­யாது. தலை­வர்கள் தங்­களை நம்­பி­யி­ருக்­கின்ற மக்­களின் நன்­மை­க­ளுக்­காகச் செயற்­ப­டும்­போது, அதனைத் தவ­றி­ழைத்­த­தாக எவரும் கூறவும் முடி­யாது.

அதே­நே­ரத்தில், இத்­த­கைய செயற்­பா­டுகள் வேறு ஒரு தரப்­பி­னரைப் பாது­காப்­ப­தற்­காக, அல்­லது அவர்­களின் அர­சியல் நலன்களை மேலோங்கச் செய்­வ­தற்­காக மேற்­கொள்­ளப்­ப­டு­வதை ஏற்­றுக்­கொள்­ளவும் முடி­யாது. அனு­ம­திக்­கவும் முடி­யாது.

தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்­பி­னரைப் பொறுத்­த­மட்டில், அவர்கள் தமிழ் மக்­க­ளுக்கு விரோ­த­மான செயற்­பா­டு­களில் ஈடுபடுவார்கள் என்று சொல்­வ­தற்­கில்லை. அவ்­வா­றான செயற்­பா­டு­களில் அவர்கள் இது­வ­ரையில் ஈடு­பட்­டி­ருந்­த­தா­கவும் தக­வல்கள் இல்லை.

எனவே, இந்த ஜனா­தி­பதி தேர்­தலில் அவர்கள் எடுக்­கின்ற முடிவு தேர்­தலில் போட்­டி­யி­டு­கின்ற ஒரு தரப்பைப் பாதிக்கும் என்­ப­தற்­காக அதனை வெளிப்­ப­டை­யாகக் கூற முடி­யாது என்று கூறு­வ­தற்கு வலு­வான கார­ணங்கள் இருக்க வேண்டும்.

கூட்­ட­மைப்­பினர் எடுக்­கின்ற அல்­லது ஏற்­க­னவே எடுத்­துள்ள முடிவின் மூலம் தமிழ் மக்­க­ளுக்கு அர­சியல் ரீதி­யாக நன்மைகள் கிடைக்கும் என்­ப­தற்­கான உத்­த­ர­வாதம், உறு­தி­மொழி ஏதா­வது இருக்­கு­மே­யானால், அதற்­காக – தமிழ் மக்­களின் நன்மை கருதி இர­க­சியம் காக்­கலாம்.

அவ்­வாறு எதுவும் இல்­லை­யென்றால் கூட்­ட­மைப்­பி­னரின் முடிவு குறித்து இர­க­சியம் காப்­பதில் எந்­த­வி­த­மான அர்த்­தமும் இல்­லை­யென்றே கூற வேண்டும்.

கூட்­ட­மைப்­பி­னரின் முடிவு குறித்து இர­க­சியம் காப்­ப­தென்­பது எவ்­வ­ளவு காலத்­திற்கு சாத்திய­மாகும் என்­பதும் முக்கியமானது.

ஏனெனில் வாக்­க­ளிப்பு தினத்­திற்கு முன்­ன­தாக எப்­ப­டியும் அதனை வெளிப்­ப­டுத்­தியே ஆக வேண்டும். அந்த முடி­வுக்­க­மைய, இன்­னா­ருக்கே இன்ன தரப்­பி­ன­ருக்கே வாக்­க­ளிக்க வேண்டும் என்ற தமிழ் மக்­க­ளுக்­கான அறி­வித்­தலை வெளி­யா­ருக்குத் தெரி­யாமல், இர­க­சி­ய­மாக, கூட்­ட­மைப்பைத் தலை­மை­யாகக் கொண்­டுள்ள மக்­க­ளுக்கு மட்டும் தெரி­விக்க முடியும் என்று கூறு­வ­தென்­பது நகைப்­புக்­கு­ரிய விட­ய­மாகும்.

ஆனால், இதில் உள்ள முக்­கிய விடயம் என்­ன­வென்றால், கூட்­ட­மைப்பின் தலைமை – குறிப்­பாக கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன் இந்தத் தேர்­தலில் யாரை ஆத­ரிப்­பது, யாருக்கு வாக்­க­ளிப்­பது என்­பது குறித்து ஏற்­க­னவே முடிவு செய்­து­விட்டார்.

அந்த முடி­வுக்கு அமை­வா­கவே உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் தலை­வர்கள், உறுப்­பி­னர்கள், மாகாண சபை உறுப்­பி­னர்­களின் கருத்­துக்­களை அறி­வ­தற்­கான கூட்­டங்கள் என்ற பெயரில் தமி­ழ­ரசுக் கட்­சி­யி­னரால் ஒழுங்கு செய்­யப்­பட்­டுள்ள கூட்­டங்கள் நடை­பெற்று வரு­கின்­றன.

அந்த கூட்­டங்­களில் தலை­வர்­க­ளினால் கருத்­துக்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றன என்று அத்­த­கைய முக்­கிய கூட்­டத்தில் கலந்து கொண்­டி­ருந்­த­வர்கள் கூறு­கின்­றார்கள்.

‘பெய­ர­ள­வி­லேயே அவர்கள் எங்­க­ளிடம் கருத்­துக்­களைக் கேட்­டார்கள். யாருக்கு நாங்கள் ஆத­ர­வ­ளிக்­கின்­றோமோ, அந்தத் தரப்­பி­ன­ரிடம், அமெ­ரிக்கா போன்ற வலிமை மிக்க நாட்டுப் பிர­தி­நி­தி­யொ­ரு­வரின் முன்­னி­லையில் உடன்­பாடு ஒன்று எட்­டப்­பட வேண்டும்.

என்று நாங்கள் எங்­க­ளு­டைய கருத்தைத் தெரி­வித்­தி­ருந்தோம். ஆனால் அது குறித்து எமது தலை­வர்கள் பெரிய அளவில் கவனம் செலுத்­த­வில்லை.

அதுபற்றி அவர்கள் அலட்டிக் கொள்­ள­வு­மில்லை. மொத்­தத்தில் இந்தச் சந்­திப்­பா­னது ஒரு கண்­து­டைப்பு சந்­திப்பு என்று சொல்­லத்­தக்க வகை­யி­லேயே அமைந்­தி­ருந்­தது’ என்று அவர்கள் தெரி­வித்­தனர்.

அடி­மட்டத் தலை­வர்கள் என்று வர்­ணிக்­கப்­ப­டு­கின்ற உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளி­னதும், மாகாண சபை உறுப்­பி­னர்­க­ளி­னதும் இந்தக் கருத்­தா­னது, கூட்­ட­மைப்பின் முடிவு சரி­யான முடி­வு­தானா என்­பதைச் சிந்­திக்கத் தூண்­டி­யி­ருக்­கின்­றது.

தமிழ் மக்கள் விலை­போய்­விடக் கூடா­து

இந்தத் தேர்­தலில் கடும் போட்­டியில் ஈடு­பட்­டுள்ள இரண்டு பகு­தி­களில் ஒரு தரப்­பையே தமிழ் மக்கள் ஆத­ரிக்க வேண்­டி­யி­ருக்­கின்­றது. அத­னை­விட அவர்­க­ளுக்கு வேறு ஒரு தெரிவு கிடை­யாது.

எனவே, ஆட்சி மாற்றம் தேவை என்ற நிலைப்­பாட்டில் உள்ள மக்­களின் வாக்­கு­களை, அந்த மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காணத்­தக்க – அதற்கு வழி சமைக்­கத்­தக்க வகையில் பயன்­ப­டுத்த வேண்­டி­யது தலை­வர்­களின் கட­மை­யாகும்.

அத்­த­கைய வழி ஏற்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கின்­றதா என்­பதே இப்­போ­தைய கேள்­வி­யாக, முக்­கிய பிரச்­சி­னை­யாக இருக்­கின்­றது.

எதி­ர­ணியில் இணைந்­துள்ள கட்­சி­களின் சார்பில் பொது வேட்­பாளர் ஒரு­வரைத் தெரிவு செய்­வதில் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பும் முக்­கிய பங்­கெ­டுத்­தி­ருந்­தது என்று சொல்­லப்­ப­டு­கின்­றது.

இதற்­கான முக்­கிய சந்­திப்­புக்­களில் கூட்­ட­மைப்பின் தலைவர் சம்­பந்தன் கலந்து கொண்­டி­ருந்தார் என்ற தக­வலும் ஏற்­க­னவே வெளி­யா­கி­யி­ருந்­தது.

ஆனால், இப்­போது கூட்­ட­மைப்பின் முடிவு குறித்து மக்­க­ளுக்கு வெளிப்­ப­டுத்த வேண்­டிய சந்­தர்ப்­பத்தில் கூட்­ட­மைப்பின் தலைவர் சம்­பந்தன் நாட்டில் இல்­லை­யென்­பது பல­ரு­டைய கவ­னத்தை ஈர்த்­தி­ருக்­கின்­றது. அது குறித்த பல்­வேறு கருத்­துக்­களும் முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றன.

எதி­ர­ணி­யினர் இந்தத் தேர்­தலில் நிச்­சயம் வெற்றி பெறுவோம் என்றும், அவ்­வாறு வெற்­றி­பெற்­றதும், தேசிய அர­சாங்கம் ஒன்றை அமைப்போம் என்றும் கூறியிருக்கின்றார்கள்.

அவர்களுடைய திட்டத்தின்படி அமையவுள்ள தேசிய அரசாங்கத்தில் கூட்டமைப்பினருக்கு அமைச்சு பதவி வழங்குவதற்கான ஏற்பாடுகள் இருப்பதாகவும் தகவல்கள் கசிந்திருக்கின்றன.

ஆட்சி மாற்றம் வேண்டும் என்று விரும்பி இந்தத் தேர்தலில் வாக்களிக்கின்ற தமிழ் மக்களுடைய வாக்குகளால் அமையப் போவதாகத் தெரிவிக்கப்படுகின்ற தேசிய அரசாங்கத்தில் அமைச்சு பதவி பெறுவதற்காக மட்டும் பயன்படுத்தப்படப் போகின்றதா என்ற கேள்வி எழுந்திருக்கின்றது.

ஏனெனில், எதிரணியினருடனான சந்திப்புக்களில் இடம்பெயர்ந்துள்ள தமிழ் மக்களின் மீள்குடியேற்றம், சிவில் ஆட்சி என்ற விடயங்கள் பற்றி மட்டுமே முக்கியமாகப் பேசப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் கசிந்திருக்கின்றன.

மீள்குடியேற்றம் என்ற விடயத்தில் பல முக்கிய அம்சங்கள் உள்ளடக்கப்பட்டிருப்பதாகத் தெரிகின்றது. அதேபோன்று, முழுமையான சிவில் ஆட்சி ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற விடயத்திலும் பல முக்கிய விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருப்பதாக அறிய முடிகின்றது.

ஆனால், கைது செய்யப்பட்டு நீண்ட நாட்களாக சிறைகளில் வாடுகின்ற தமிழ் இளைஞர்கள், காணமல் போனவர்கள் உள்ளிட்ட விடயங்களும் அரசியல் தீர்வு பற்றிய விடயமும் பேச்சுக்களில் உள்ளடக்கப்படவில்லை என்றும் தகவல்கள் கசிந்திருக்கின்றன.

எனவே, இந்தத் தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும். தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்பதில் கூட்டமைப்பினர் உறுதியாக இருக்கின்றனர்.

ஆனால் அவ்வாறு அளிக்கப்படுகின்ற வாக்குகள் அரியணையில் முகங்கள் மாறுவதற்காக பயன்படுத்தப்படப்போகின்றதா? அல்லது அதற்கும் அப்பால் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றுவதற்குரிய அரசியல் வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொள்வதற்கும் பயன்படுத்தப்படப் போகின்றதா ? என்பது தெளிவில்லாமல் இருக்கின்றது ஆனாலும் வாக்களிப்பது அவசியம்.

-செல்­வ­ரட்னம் சிறி­த­ரன்-

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கருவில் வளரும் குழந்தை ஆணா? பெண்ணா? – தெரிஞ்சுக்க சூப்பர் வழிகள்…!!
Next post வேப்பங்குப்பம் அருகே பள்ளி மாணவன் கடத்தல்: 3 பேர் கைது!!