15 வயது சிறுமியை கற்பழித்து கர்ப்பிணியாக்கிய 82 வயது தாத்தா கைது!!

Read Time:2 Minute, 12 Second

a9bd0d48-4e3d-4b02-a9ec-680623f49144_S_secvpfதெலுங்கானா மாநிலம், அடிலாபாட் மாவட்டத்தில் உள்ள பெரக்கம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் லஸ்மைய்யா(82).

இதே கிராமத்தில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டுக்கு அடிக்கடி சென்று வருவதை வழக்கமாக கொண்டிருந்த இவர், அந்த வீட்டில் உள்ளவர்கள் வேலைக்கு சென்ற பிறகு வீட்டில் தனியாக இருந்த 15 வயது சிறுமியை பலவந்தப்படுத்தி கற்பழித்து விட்டார்.

பின்னர், நமக்குள் நடந்ததை வெளியே சொல்லி விடுவேன் என்று மிரட்டி, அவ்வப்போது அந்த சிறுமியை வற்புறுத்தி, தனது ஆசையை தணித்துக் கொள்வதையே வாடிக்கையாக்கிக் கொண்டார்.

இந்நிலையில், தனக்கு அடி வயிற்றில் பயங்கரமாக வலிப்பதாக கடந்த வாரம் தனது பெற்றோரிடம் அந்த சிறுமி கூறியுள்ளார். இதனையடுத்து, அவளை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர்.

சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள், ‘உங்கள் மகள் நான்கு மாத கர்ப்பமாக உள்ளார்’ என்று கூறியதைக் கேட்டு திகைத்துப் போன பெற்றோர், இந்த கூடாத கர்ப்பத்துக்கு காரணம் யார்? என்று கேட்டபோது, வீட்டில் யாருமில்லாத போது லஸ்மைய்யா தாத்தா நடத்திய கூத்தை அந்த சிறுமி அம்பலமாக்கினாள்.

இதனையடுத்து, அவர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் அவரை கைது செய்து விசாரித்தபோது, இந்த கர்ப்பத்துக்கு நான் தான் காரணம் என்று தைரியமாக வாக்குமூலம் அளித்த லஸ்மைய்யா மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், அவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கணவனுக்கு பயந்து கள்ளக்காதலனுடன் தூக்கில் தொங்கிய பெண்: 3 குழந்தைகள் தவிப்பு!!
Next post கேரளாவில் 8 குடும்பங்களை சேர்ந்த 30 கிறிஸ்தவர்கள் இந்து மதத்துக்கு மாற்றம்!!