பி.கே – விமர்சனம்!!

Read Time:2 Minute, 53 Second

PK-Movie-posterஆழமான கதை, அம்சமான திரைக்கதையுடன் அமீர்கான், அனுஷ்காவின் அற்புதமான நடிப்பும் சேர்ந்துள்ளதால் பி.கே திரைப்படம் மூலம் ரசிகர்களுக்கு ஒரு தரமான படம் கிடைத்துள்ளது.

சமூக சிந்தனையுள்ளவர்கள் அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.

வேற்றுகிரகத்தில் இருந்து ராஜஸ்தானில் தரையிறங்கும் அமீர்கானுக்கு தன்னுடைய கிரகத்தில் இருந்து வரும் தொடர்பு துண்டிக்கப்படுகிறது.

இதனால் வேறு வழியின்றி பூமியிலேயே வாழ முடிவு செய்கிறார். ஆனால் அவருடைய அதிகப்படியான அறிவு பூமியில் வாழும் மக்களுடன் பொருந்த மறுக்கின்றது. ஜாதி, மத வேறுபாடு காரணமாக ஒருவருக்கொருவர் முட்டிக்கொள்வது அமீர்கானுக்கு வித்தியாசமாக தெரிகிறது.

இந்நிலையில் அவருக்கு சஞ்சய் தத்தும், அனுஷ்கா சர்மாவும் நண்பர்களாகின்றனர். பூமியில் உள்ள மக்களோடு பழகி பல்வேறு விஷயங்களை ஆராய்கிறார் அமீர்கான்.
இறுதியில் அவர் தன்னுடைய கிரகத்திற்கே சென்றாரா? அல்லது பூமியில் உள்ள மக்களை திருத்துவதற்கு முயற்சி செய்தாரா என்பதுதான் கிளைமாக்ஸ்.

அமீர்கானின் நடிப்பு குறித்து எத்தனை பத்தி எழுதினாலும் எதையாவது விட்டுவிட்டோமோ என்று எண்ணக்கூடிய அளவுக்கு பிரேமுக்கு பிரேம் நடிப்பில் தனது முத்திரையை பதித்துள்ளார்.

அனுஷ்கா சர்மாவும் அவருக்கு ஈடுகொடுத்துள்ளார். சிறிது நேரமே வந்தாலும் சஞ்சய்தத் மனதில் நிற்கிறார்.

ஒரு படத்தின் திரைக்கதை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணமாக அமைந்துள்ளது இந்த படத்தின் திரைக்கதை. ராஜ்குமார் ஹிரானியை அதற்காகவே பலமுறை பாராட்டலாம்.
அமீர்கானின் உணர்ச்சி மிக்க கதாபாத்திரத்தை சரியான காட்சி அமைப்பின் மூலம் பிரமாதப்படுத்தியுள்ளார் ஹிரானி.

பின்னணி இசை படத்திற்கு பெரிய பலமாக அமைந்தாலும் விறுவிறுப்பான திரைக்கதையில் பாடல்கள் இடைஞ்சலாக உள்ளது போல் தோன்றுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 2 குழந்தைகளை கணவர் கடத்தியதாக மனைவி நாடகம்: போலீசார் விசாரணையில் அம்பலம்!!
Next post ஆசிரம பெண் கற்பழிப்பு: 2 வாலிபர்கள் கைது!!