பெண்ணை கற்பழித்து கொலை மிரட்டல் விடுத்த வழக்கு: கூலித்தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை!!

Read Time:1 Minute, 42 Second

70ff00b6-d72e-4f90-9042-0281c5c93a57_S_secvpfவிஜயாப்புரா (மாவட்டம்) அருகே உள்ள அலகினல் எனும் கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமண் பானுதாஸ் போஸ்லே. கூலித்தொழிலாளி. இவர் கடந்த 2009-ம் ஆண்டு ஜூன் மாதம் 19-ந் தேதி அதே கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்ணை புதர் மறைவுக்கு தூக்கிச்சென்று கைகள் இரண்டையும் கட்டி வைத்து கற்பழித்தார். பின்னர் இது குறித்து வெளியே யாரிடமாவது கூறினால் கொலை செய்துவிடுவதாக மிரட்டினார்.

இதுகுறித்து பெண் கொடுத்த புகாரின் பேரில் விஜயாப்புரா புறநகர் போலீசார் லட்சுமண் பானுதாஸ் போஸ்லேயை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுதொடர்பான வழக்கு முதலில் விஜயாப்புரா 2-வது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்திலும் அதன் பின்னர் விஜயப்புரா செசன்சு சிறப்பு கோட்டிலும் நடைபெற்றது.

இந்த நிலையில் வழக்கு விசாரணை முடிவடைந்து தீர்ப்பு கூறப்பட்டது. இதில், பெண்ணை கற்பழித்த குற்றம் நிரூபிக்கப்பட்டதால், லட்சுமண் பானுதாஸ் போஸ்லேவுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார். இதனையடுத்து அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இலவச கண் சிகிச்சை முகாமில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட 10 பேருக்கு பார்வை பறிபோனது!!
Next post பெண்கள் ஜீன்ஸ் அணியவும், செல்போன் பயன்படுத்தவும் தடை: பீகார் பஞ்சாயத்து அதிரடி உத்தரவு!!