போதையில் காரோட்டிய ஜெய்க்கு அபராதம்!!

Read Time:2 Minute, 2 Second

Untitled-120விஜய்யின் பகவதி படம் மூலம் ஜெய் அறிமுகமானார். சென்னை 28, சுப்ரமணியபுரம், ராஜா ராணி, கோவா, வாமணன், எங்கேயும் எப்போதும் உள்ளிட்ட பல படங்களில் நாயாகனாக நடித்துள்ளார்.

சென்னையில் இரவு நடந்த விருந்து நிகழ்ச்சியொன்றில் ஜெய் பங்கேற்றார். பின்னர் ராயப்பேட்டையில் இருந்து அடையாறு நோக்கி டாக்டர் ராதா கிருஷ்ணன் சாலையில் காரில் சென்றார்.

காரை அவரே ஓட்டினார். மயிலாப்பூர் திருவள்ளூவர் சிலை அருகில் போக்குவரத்து பொலிசார் வாகனசோதனையில் ஈடுபட்டனர். ஜெய் காரையும் நிறுத்தினார்கள். காரில் இருப்பது ஜெய் என்பது தெரியாமல் அவரிடம் போதை ஆசாமிகளை கண்டு பிடிக்கும் நவீன கருவியில் ஊதச்சொன்னார்கள். அக்கருவி ஜெய் குடித்து இருப்பதாக காட்டியது.

இதையடுத்து வாகனத்தை ஓரம் கட்டச் செய்து ஜெய்யை கீழே இறக்கினார்கள். போதையில் கார் ஓட்டியதற்காக அவருக்கு அபராதம் வித்தனர். அப்போது அப்பகுதியில் இருந்தவர்கள் ஜெய்யை அடையாளம் கண்டனர்.

அவரோடு போட்டோ எடுத்துக் கொள்ள முண்டியடித்தார்கள். குடிபோதையில் வாகனம் ஓட்டி பொலிசாரிடம் அவர் சிக்கியதையும் தெரிந்து கொண்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

கூட்டத்தினரை தவிர்க்க ஜெய் பொலிசாரிடம் அவசரமாக அபராத ரசீதை பெற்றுக் கொண்டு அங்கிருந்து வேகமாக புறப்பட்டுச்சென்று விட்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 20 வயது காதலி முகத்தில் ஆசிட் வீசிய 80 வயது காதலன்!!
Next post ஆர்யாவுடன் நித்தியா!!