மேலும் மூன்று ஐ.தே.க உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு ஆதரவு!!

Read Time:1 Minute, 8 Second

187518148Untitled-1லாகுகல பிரதேசசபையின் உப தலைவர் துஷான் ஜயசூரிய மற்றும் உறுப்பினர்களான ஜீ.தயாரத்ன மற்றும் ஜீ.விமலசேன ஆகியோர் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளித்துள்ளனர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக இன்று அம்பாறைக்கு சென்றிருந்த போதே இது நிகழ்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இவர்கள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்து கொண்டதை அடுத்து, லாகுகல பிரதேசசபையில் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களின் எண்ணிக்கை ஏழில் இருந்து நான்காக குறைந்துள்ளது.

இதேபோல் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உறுப்பினர்களின் எண்ணிக்கை நான்கில் இருந்து ஏழாக உயர்வடைந்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பொது வேட்பாளரின் வாக்குறுதிகள் வரவு செலவுத் திட்டத்தின் பிரதி!!
Next post வடக்கு ரயில் போக்குவரத்து பாதிப்பு!!