எம் தாமதம் சட்டவிரோத வாய்ப்புகளை தந்து விடலாம்!!
நாடு முழுக்க வாழும் தமிழ் பேசும் மக்கள், ஜனவரி எட்டாம் திகதி காலை ஏழு மணிக்கும் பத்து மணிக்கும் இடையில் தமது வாக்களிப்பை நடத்தி முடித்துவிட வேண்டும். வாக்களிப்பு தினத்தன்று மாலை நேர வாக்களிப்பு வேண்டாம். தாமதம் வேண்டாம். மாலை நான்கு மணிவரை வாக்களிப்புக்கான வாய்ப்பு இருந்தாலும், நாம் நேரகாலத்துடன் வாக்களிப்பது நமது வீட்டுக்கும், நமது நாட்டுக்கும் நல்லது என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
மாத்தளை நகரில் நேற்று மாலை நடைபெற்ற பொது எதிரணி பிரச்சார கூட்டத்தில் உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது,
இந்த ஆட்சிக்கொடுமையில் இருந்து கொஞ்சமாவது மீண்டு தலை தூக்க வேண்டும். இன்றைய இறுக்கமான சூழலில் இருந்து கொஞ்சமாவது மீள வேண்டும். துன்பப்படும் தமிழ் பேசும் மக்களின் கோணத்தில் இருந்து பார்த்தால் தான் இந்த உண்மைகள் புரியும்.
இதற்கு இன்று எம்முன் இருக்கும் ஒரே வழி, அன்னப்பறவை சின்னத்துக்கு வாக்களித்து, இன்றைய ஆளும் கூட்டணியை தோற்கடிப்பதுதான்.
அதனாலேயே பல்வேறு விட்டுக்கொடுப்புகளுடன் இந்த கூட்டணியில் இன்று நாம் இருக்கின்றோம்.
எங்கள் அரசியல் சமூக வாழ்வில் ஆரம்பித்து, எம் சமூக பொருளாதார வாழ்விலும் கைவைக்க இவர்கள் ஆரம்பித்து விட்டார்கள். எமது நேர்மையான நியாயமான அரசியல் அபிலாஷகளை பிடுங்கினார்கள். நாம் என்ன தொழில் செய்ய வேண்டும், எப்படி செய்ய வேண்டும் என்று கட்டளையிட்டு எம் பொருளாதாரத்தில் கைவைத்தார்கள்.
இப்படியே போனால், நாளை நாம் வழிபடுவதற்கும், தொழுவதற்கும், பிரார்த்திப்பதற்கும் இவர்களிடம் அனுமதி வாங்க வேண்டி வரும்.
எனவே தமிழ் பேசும் மக்கள் மத்தியில் இன்று வாதப்பிரதிவாதங்கள் தேவையில்லை. தயக்கங்களுக்கு அவசியம் இல்லை. எமது வாக்கு முக்கியமானது. அதை பாதுகாப்பாக உரிய இடத்துக்கு கொண்டு சென்று சேர்ப்பது அதைவிட முக்கியமானது.
இந்த காட்டாட்சியை விரட்ட அதை பயன்படுத்த வேண்டும். எனவேதான் ஜனவரி எட்டாம் திகதி காலை ஏழு மணிக்கும், பத்து மணிக்கும் இடையில் தமது வாக்களிப்பை நடத்தி முடித்துவிட வேண்டும் என தமிழ், முஸ்லிம் மக்களை நான் கோருகிறேன்.
தாமதிக்காதீர்கள். எங்கள் தாமதம், தோல்வியில் துவண்டு கொண்டிருக்கும் இவர்களுக்கு சட்ட விரோத வாய்ப்புகளை தந்து விடலாம். அதற்கு இடம் கொடுக்க வேண்டாம், என்றார்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating