கள்ளக்காதலியை கொன்று செப்டிக் டேங்கில் வீசிய ஒர்க்ஷாப் தொழிலாளி!!

Read Time:3 Minute, 4 Second

79f16d02-4001-449a-86ee-703ef04a9e8f_S_secvpfகேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் குண்டரா பகுதியை சேர்ந்த ஒர்க்ஷாப் தொழிலாளி விஜயராஜன் (வயது 50). இவரது மனைவி கீதா (44). கருத்து வேறுபாட்டால் கடந்த 8 வருடங்களாக பிரிந்தனர். இவர்களது விவாகரத்து வழக்கு குண்டரா நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. விஜயராஜன் தனியே வசித்து வருகிறார்.

மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் மினி (42). இவரும் கணவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால் அவரை பிரிந்தார். மினிக்கு 18 மற்றும் 22 வயதில் மகன்கள் உள்ளனர்.

22 வயது மகனுடன் மினி குண்டரா பகுதியில் உள்ள விஜயராஜன் வீட்டருகே குடியேறினார். இந்நிலையில் விஜயராஜனுக்கும் மினிக்கும் நட்பு ஏற்பட்டது. பின்னர் அதுவே கள்ளக்காதலாக மாறியது. இருவரும் கணவன்– மனைவி போலவே மினி வீட்டில் வசித்து வந்தனர்.

நேற்று காலையில் இருந்து மினியை காணவில்லை. இதை அறிந்த அவரது மகன் அக்கம் பக்கம் மற்றும் உறவினர் வீடுகளில் தேடிப்பார்த்தார். ஆனால் எங்கும் மினியை காணவில்லை. தாய் மாயமானது குறித்து குண்டரா போலீசில் அவரது மகன் புகார் செய்தார்.

வழக்குப்பதிவு செய்த இன்ஸ்பெக்டர் சுஜில் மாயமான மினியை தேடி வந்தார். மினிக்கும் விஜயராஜனுக்கும் கள்ளக்காதல் இருந்ததை அறிந்த போலீசார் விஜயராஜனை தேடினர். அவரை காணவில்லை.

எனவே அவரை பிடித்து விசாரிக்க போலீசார் தேடினர். கருநாகபள்ளி என்ற இடத்தில் நின்ற விஜயராஜனிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர் மினியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

இது குறித்து போலீசாரிடம் விஜயராஜன் கூறியதாவது:–

நேற்று முன்தினம் மினிக்கும் எனக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த நான் மினியை கழுத்தை நெரித்து கொலை செய்தேன். யாருக்கும் தெரியாமல் இருக்க பிணத்தை செப்டிக் டேங்கில் வீசினேன்.

பின்னர் முதல் மனைவியை கொலை செய்ய அவரது வீட்டுக்கு புறப்பட்டேன். அப்போது போலீசார் என்னை மடக்கிப்பிடித்தனர் என்றார்.

வழக்குப்பதிவு செய்த போலீசார் விஜயராஜனை கைது செய்தனர். இன்று காலை சேப்டிக் டேங்கில் உள்ள மினியின் பிணத்தை மீட்கும் பணி நடக்கிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கல்வி கட்டணம் செலுத்தாததால் 7 வயது சிறுவனை அடித்து கொன்ற ஆசிரியர்!!
Next post முத்த போராட்டம் ஒழுக்கக்கேடான செயல்: கேரள ஐகோர்ட்டு கருத்து!!