இயக்குனர் பாலச்சந்தர் உடல் நலக்குறைவால் ஆஸ்பத்திரியில் அனுமதி: ரஜினி நேரில் சந்திப்பு!!

Read Time:1 Minute, 32 Second

b7030fdf-637c-41ba-9045-2c9019d66f09_S_secvpfஇயக்குனர் சிகரம் பாலச்சந்தருக்கு 84 வயது ஆகிறது. இந்நிலையில், இன்று அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கே.பாலச்சந்தரை, ரஜினி நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர், வெளியே வந்த ரஜினி, கே.பி.சார் நலமாக இருக்கிறார். அவர் என்னைப் பார்த்தார், சிரித்தார். அவருக்கு எதுவும் ஆகாது. அவருக்காக கடவுளிடம் பிரார்த்திருக்கிறேன் என்று கூறிவிட்டு சென்றார்.

அவரைத் தொடர்ந்து நடிகை குஷ்பு, மனோபாலா ஆகியோரும் இயக்குனர் பாலச்சந்தரை ஆஸ்பத்திரியில் சந்தித்து நலம் விசாரித்தனர். இதற்கிடையில், கே.பாலச்சந்தர் மருத்துவமனையில் இறந்துவிட்டதாக இணையதளங்களில் செய்திகள் பரவத் தொடங்கின. இதுபோன்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று மருத்துவமனையில் குஷ்பு கேட்டுக் கொண்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மீண்டும் ஒஸ்கார் களத்தில் ரஹ்மான்!!
Next post இளம்பெண் கொலை: திருமணத்திற்கு வற்புறுத்தியதால் கொன்றேன்- கள்ளக்காதலன் வாக்குமூலம்!!