தேர்தல் காரணமாக முஸ்லிம்களுக்கு சாதகமான முடிவுகள்!!
இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவிருக்கும் இவ்வேளையில், கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களின் பொதுவான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பில் அரசாங்கம் தனது கவனத்தை திருப்பியுள்ளதை காண முடிகின்றது.
குறிப்பாக காணி, வாழ்வாதாரம் மற்றும் மத வழிபாட்டு உரிமை தொடர்பான பிரச்சினைகள் தொடர்பில் சாதகமான முடிவுகள் சில தமக்கு கிடைத்துள்ளதாக முஸ்லிம்கள் தெரிவிக்கின்றார்கள்.
அண்மையில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவிற்கும் அமைச்சர் ரவூஃப் ஹக்கீம் தலைமையிலான சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகளுக்குமிடையில் பாதுகாப்பு அமைச்சில் சந்திப்பொன்று இடம்பெற்றது.
இந்த சந்திப்பையடுத்து பாதுகாப்பு அமைச்சின் செயலாளரால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் பேரில் திருகோணமலை உயர்பாதுகாப்பு வலயமொன்றிலுள்ள கருமலையுற்று பள்ளிவாசல் தற்போது விடுவிக்கப்பட்டு இராணுவத்தினால் பள்ளி வாசல் நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினரான மொகமட் ரம்ழான் அன்வர் கூறுகின்றார்.
இந்த பள்ளிவாசலை விடுவிப்பதற்காக கிழக்கு மாகாண சபை ஊடாக இரு வருடங்களுக்கு மேலாக முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டும் அது கை கூடாமல் போனதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.
அந்த பகுதியில் கரைவலை மீனவர்கள் கடற்றொழிலில் ஈடுபடுவதற்கு ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளும் தற்போது நீக்கப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டத்தில் ஒலுவில் வெளிச்சவீட்டு அருகாமையில் கடந்த சில வருடங்களாக அமைந்திருந்த கடற்படை முகாமும் இன்றுடன் வாபஸ் பெறப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக புல்மோட்டை பிரதேசத்தில் காணி தொடாபான பிரச்சினைக்கும் தீர்வு கிடைக்கக் கூடிய அறிகுறிகள் தென்படுவதாவும் ரம்ழான் அன்வர் குறிப்பிட்டார்.
கடந்த 4- 5 வருடங்களாக முஸ்லிம்களால் முன்வைக்கப்பட்ட இந்த பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கம் ஏற்கனவே கவனம் செலுத்தவில்லை என்றும், தற்போது ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம்களின் வாக்குகளை பெறுவதற்கான முயற்சியாகவே இவை தற்போது நிறைவேற்றப்படுவதாகவும் பிரதான எதிர்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி குற்றஞ்சாட்டுகிறது.
ஆனால் இந்த முயற்சியானது அவர்களது எதிர்பார்க்கும் பலனை கொடுக்கமாட்டாது என்றும், கிழக்கு மாகாண முஸ்லிம்களை பொறுத்தவரை ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக ஏற்கனவே முடிவு செய்து விட்டார்கள் என்றும் அக்கட்சியை சேர்ந்த கிழக்கு மாகாண சபை உறுப்பினரான மொகமட் மஹ்ருப் இம்ரான் குறிப்பிடுகின்றார்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating