ஆண் விபசாரி வேலை தருவதாக 500 பேரிடம் ரூ.40 லட்சம் மோசடி: ஆந்திராவில் 3 பேர் கைது!!

Read Time:3 Minute, 21 Second

0ad564c0-02e1-4a20-a69c-d234b7ea39f2_S_secvpfஐதராபாத்தில் உள்ள தங்களது நிறுவனத்துக்கு ஆண் விபசாரிகள் தேவை என்றும், ரூ.10 ஆயிரம் கட்டி முன்பதிவு செய்தால் தினமும் ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கலாம் என்றும், இன்டர்நெட்டில் துக்காராம் என்பவர் விளம்பரம் செய்திருந்தார். அதில் ஒரு போன் நம்பரும் இடம் பெற்றிருந்தது.

கடந்த 1 ஆண்டாக பல நம்பர்களை மாற்றி மாற்றி கொடுத்து துக்காராம் விளம்பரம் செய்திருந்தார். இந்த நிலையில் சுமார் 500 பேர் துக்காராமிடம் பணத்தை கட்டி ஏமாந்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. ஆண் விபசாரி என்ற போர்வையில் வாலிபர்கள் பலர் பணம் கொடுத்து ஏமாந்திருப்பதால் யாரும் புகார் செய்ய முன்வரவில்லை.

இதையொட்டி இந்த மோசடி தொடர்பாக ஐதராபாத் சைபர் கிரைம் உதவி கமிஷனர் அனுதாரா நடவடிக்கையில் இறங்கினார். இந்த நடவடிக்கையின்படி போலீஸ்காரர் ஒருவர் ஆண் விபசாரி போல துக்காராம் கொடுத்த நம்பருக்கு போன் செய்தார்.

அவரிடம் துக்காராம் ஆண்டுக்கு ஒருமுறை ரூ.10 ஆயிரம் செலுத்தி முன்பதிவு செய்ய வேண்டும். அல்லது 6 மாதத்துக்கு ஒருமுறை ரூ.6000 செலுத்தி முன்பதிவு செய்ய வேண்டும். ஒரு ஆண் விபசாரிக்கு மாதத்துக்கு 4 முறை வாய்ப்பு தரப்படும். ஒவ்வொரு முறையும் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம். அந்த பணத்தில் 20 சதவீதம் கம்பெனிக்கு கமிஷன் கொடுக்க வேண்டும். இதன் மூலம் மாதம்தோறும் நன்றாக சம்பாதிக்கலாம்.

முன்பதிவுக்கான பணத்தை குறிப்பிட்ட தனியார் வங்கியில் செலுத்தினால் அந்த வங்கிக்குரிய ஏ.டி.எம்.மில் வந்து எடுத்துக் கொள்வேன். அந்த ஏ.டி.எம்.க்கு வந்தால் முன்பதிவு பணத்துக்கான ரசீதை கொடுத்து விடுவேன் என்றார்.

இதையடுத்து சைபர் கிரைம் உதவி கமிஷனர் அனுராதா மற்றும் போலீஸ் படையினர் ஐதராபாத் ஆசிப் நகரில் உள்ள குறிப்பிட்ட ஏ.டி.எம். அருகே பதுங்கி இருந்தனர். அப்போது துக்காராம், அவரது கூட்டாளிகள் சரணப்பா, அஜிகொண்ட ராஜு ஆகிய 3 பேரும் ஏ.டி.எம்–க்கு வந்தனர். அப்போது போலீசார் அவர்களை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

கைதான துக்காராம் ஆந்திரா, செலுங்கானா, மராட்டியம் போன்ற இடங்களில் வாலிபர்களை ஏமாற்றி ரூ.40 லட்சம் வரை மோசடி செய்தது தெரிய வந்தது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post போலீஸ் சீருடையில் ஏட்டு என்று கூறி வந்த 4 மாத கர்ப்பிணி பெண் கைது!!
Next post கோபி அருகே மாமியாரை வெட்டி கொன்ற மருமகன்!!