தங்கையை கற்பழித்து கொன்ற வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை!!

Read Time:3 Minute, 1 Second

4dcbef8b-9e9a-40f5-b44b-904a9b941439_S_secvpfகோவை, சீரநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்தவர் ரவி (வயது 27). கட்டிட தொழிலாளி. கடந்தாண்டு இவர் தனது தாய், தந்தை மற்றும் 21 வயது தங்கையுடன் ரத்தினபுரி பகுதியில் வசித்து வந்தார்.

சம்பவத்தன்று போதையில் வீட்டுக்குச் சென்ற ரவி அங்கு தனியாக இருந்த தனது தங்கையை பாலியல் பலாத்காரம் செய்து கழுத்தை நெரித்து கொலை செய்தார்.

இதுதொடர்பான புகாரில் ரத்தினபுரி போலீசார் ரவியை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். சில மாதங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளிவந்த ரவி சீரநாயக்கன்பாளையம் வாடகை வீட்டில் குடியேறினார்.

இவர் மீதான வழக்கு விசாரணை கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் நாளை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுகிறது. இதனால் அவர் மன உளைச்சலில் இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த ரவி, தனது தாயின் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவலறிந்தது சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ஆர்.எஸ்.புரம் போலீசார் ரவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ரவி தாய்க்கு எழுதி வைத்திருந்த கடிதம் போலீசாரிடம் சிக்கியது. அதில் அன்புள்ள அம்மாவுக்கு நான் உங்களை பிரியும் நேரம் வந்துவிட்டது. சாகப்போகிறேன். கவலைப்பட வேண்டாம். அடுத்த ஜென்மத்திலாவது, உங்கள் பெயரை கெடுக்காத உயிராக வருவேன்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

இதுகுறித்து ஆர்.எஸ்., புரம் போலீசார் விசாரணை நடத்திய போது ரவி ஜாமீனில் வெளிவந்த பின்னர் தனது நண்பர்கள், உறவினர்கள் என எல்லோரும் தன்னை புறக்கணிப்பதாகவும், அவர்களை பார்க்கவே, அவமானமாக இருப்பதாகவும் புலம்பி வந்துள்ளார்.

மேலும் தான் செய்த கொடூரச் செயலை எண்ணி மனமுடைந்த அவர் அதற்கான தண்டனையை தனக்குத் தானே விதித்துக் கொள்ளப்போவதாகவும் கூறி வந்துள்ளார் என்பது தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் ரவியின் தற்கொலை குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மோடி அரசாங்கத்தை பிரிந்தார் வைகோ!!
Next post ரஜினியோடு ரவிக்கையுடன் நடித்தமை வெட்கம்!!!